வா வா பூவே வா பாடல் வரிகள்
வா வா பூவே வா..
உன் வாசம் பார்க்க வேண்டும் வா..
தென்றல் வரும் சாலை மீது நீ வா..
வா வா அன்பே வா..
என் வாசல் உன்னை தேடும் வா..
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா..
எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன்
பூங்காற்றாய் நீ வா..
மழை காலமே புது ஓடை நான்
ஒரு வெள்ளம் போல் வா..
அடி இன்னும் இன்னும் பக்கம் கொஞ்சம் வா..
வா வா பூவே வா..
உன் வாசம் பார்க்க வேண்டும் வா..
தென்றல் வரும் சாலை மீது நீ வா..
உன்னைப் பார்த்த பூக்கள்
கண்ணை மூடவில்லை..
அதிசய பெண்ணே நீ வா வா வா..
உன்னை பார்த்த பின்னே
கைகள் ஓடவில்லை..
அருகினில் நீ கொஞ்சம் வா வா வா..
உன் புன்னகை அதை காசைப்போல்
நான் சேர்ப்பேனே வா..
உன் தோள்களில் தலை சாயவே
நான் பூத்தேனே வா..
நீ காதல் வானவில்லாக
அதில் காணும் வண்ணம் நானாக..
உன் அழகை பருக அழகே நீ வா..
வா வா அன்பே வா..
என் வாசல் உன்னை தேடும் வா..
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா..
தங்கக்கட்டில் போடு
என்னை கையில் சேறு..
மூச்சினில் தீ மூட்டு வா வா வா..
வண்ண சிற்பம் பார்த்து
கண்கள் பசி ஆச்சு..
தாமதம் ஆகாது வா வா வா..
நீ வேண்டவும் விரல் தூண்டவும்
ஒரு பூவானேன் வா..
உன் மடியிலே நான் இரவிலே கண் மூடவா..
உன் தோள்கள் ரெண்டும் கிளையாக..
நான் பஞ்ச வர்ண கிளியாக..
சுக கதைகள் சொல்ல அருகே நீ வா..
வா வா பூவே வா..
உன் வாசம் பார்க்க வேண்டும் வா..
தென்றல் வரும் சாலை மீது நீ வா..
வா வா அன்பே வா..
என் வாசல் உன்னை தேடும் வா..
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா..
எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன்
பூங்காற்றாய் நீ வா..
மழை காலமே புது ஓடை நான்
ஒரு வெள்ளம் போல் வா..
அடி இன்னும் இன்னும் பக்கம் கொஞ்சம் வா..
வா வா பூவே வா..
உன் வாசம் பார்க்க வேண்டும் வா..
தென்றல் வரும் சாலை மீது நீ வா..
Movie: Rishi
Lyrics: Pazhani Bharathi
Music: Yuvan Shankar Raja