Annaatthe cover

Movie: Annaatthe (2020)
Music: D. Imman
Lyricists: Arun Bharathi
Singers: Mukesh Mohamed, Nochipatti Thirumoorthi  and Keezhakarai Samsutheen

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: டி. இமான்

ஆண்: சாட்ட எடுத்துகிட்டு வேட்டி மடிச்சிக்கிட்டு எதிரிய எருவென எரி எரி எரிடா

ஆண்: கன்னங் கருப்பிருட்டு கடுவாய் புலிவெரட்டு கயவரின் கதையினை முடி முடி முடிடா

குழு: போடு .போடு…

ஆண்: வீச்சருவா கொண்ட கொல குலசாமி வந்துருச்சே பகைக் கொலைநடுங்க
குழு: வா சாமி.வா சாமி

ஆண்: கெட்டவன அது பொலி பொலி போட நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க
குழு: வா சாமி..வா சாமி

ஆண்: திமுதிமு குதிரைகள் திமிறிவர ஒரு வேட்டைகள் நடக்கிறதே கரு கரு தருமத்தின் தலைவனிடம் உன் ஆட்டங்கள் முடிகிறதே

ஆண் மற்றும்
குழு: மீசைய பாரு கெடா கெடா மிருகத்த அழிக்க வர்றானடா குருதியக் குடிப்பான் மொடா மொடா கொடியவர் கூட்டம் ஒடுங்கடா

ஆண்: வீச்சருவா கொண்ட கொல குலசாமி வந்துருச்சே பகைக் கொலைநடுங்க
குழு: வா சாமி.வா சாமி

ஆண்: கெட்டவன அது பொலி பொலி போட நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க

குழு: மொகன மொகன

ஆண் மற்றும்
குழு: வெள்ள குதிரயில வேட்ட தொடங்கையில நரிகளின் நரித்தனம் ஒடு ஒடு ஒடுங்கும் வேங்க திமிறையில வேகம் எடுக்கையில பகைவனின் தொடைகளும் நடு நடு நடுங்கும்

குழு: வா சாமி.வா சாமி வா சாமி.வா சாமி

ஆண்: உக்கிரங்கள் ஒன்றுபட உச்சிவானம் ரெண்டுபட உருமாக் கட்டி ஊரக் காக்க
குழு: வாரான் வாரான் வாரான் மதுர வீரன் மதங்கொண்டு வாரான்

ஆண்: சந்ததியா காத்து நிக்க சங்கடங்கள் தீத்து வைக்க பாவக் கணக்க தீத்துக் கட்ட
குழு: வாரான் வாரான் வாரான் மதுர வீரன் மதங்கொண்டு வாரான்

ஆண்: நெருப்புக் கண்ணில் எரியுதடா எதுத்து நிக்க யாரு நெருங்கி வரும் வினைகளெல்லாம் தவிடு பொடியாக்கு

ஆண் மற்றும்
குழு: மீசையப் பாரு கெடா கெடா மிருகத்தை அழிக்க வர்றானடா குருதியக் குடிப்பான் மொடா மொடா கொடியவர் கூட்டம் ஒடுங்கடா

ஆண்: வீச்சருவா கொண்ட கொல குலசாமி பகை கொலை நடுங்க
குழு: வா சாமி.. வா சாமி

ஆண்: கெட்டவன அது பொலி பொலி போட நஞ்சுடுச்சே அவன் தொட நடுங்க
குழு: வா சாமி.வா சாமி

ஆண்: அடி அடி இடியென தரதெறிக்க ஒரு தாண்டவம் நடக்கிறதே பிட பிட பிடரியை இழுத்து வர பெரும் பிரளயம் வெடிக்கிறதே

ஆண் மற்றும்
குழு: சலங்கைகள் ஆடுது சடா சடா சடையினில் இறுக்கிட வர்றானடா உடுக்கையின் ஓசை விடா விடா உருமிய ஓங்கி அடிங்கடா

ஆண் மற்றும்
குழு: மீசையை பாரு கெடா கெடா மிருகத்தை அழிக்க வர்றானடா குருதியை குடிப்பான் மொடா மொடா கொடியவர் கூட்டம் ஓடுங்கடா

குழு: வா சாமி…