Uzhuthane Uzhuthane Song Lyrics
Movie: Yer Munai (1992)
Music: L. Vaithiya Nathan
Lyricists: Vairamuthu
Singers: T. M. Soundarajan
Added Date: Feb 11, 2022
ஆண்: உழுதானே உழுதானே விவசாயி உழுதானே யாருக்கு என்ன வெச்சான் அட யாருக்கு என்ன வெச்சான் மனைவிக்கும் மகனுக்கும் மகன் பெத்த மகனுக்கும் கடன் தானே மிச்சம் வெச்சான் வெறும் கடன் தானே மிச்சம் வெச்சான்
ஆண்: உழுதிட்டு ஏர் விட்டு விதையிட்டு பயிரிட்டு அடிபட்டு கண்ணீர் விட்டான் கண்ணீர துடைக்க வந்தவங்க அத காசு பண்ணப் பாத்தாங்க
ஆண்: துன்பத்த எல்லாரும் சொன்னாங்க அத துடைக்கும் வழியும் என்னாங்க துன்பத்த எல்லாரும் சொன்னாங்க அத துடைக்கும் வழியும் என்னாங்க
ஆண்: மூளை உழைப்புக்கு உடல் உழைப்பென்ன குறைவா சேத்துக்குள் புழுவாக சிக்கி கிடப்பது எளிதா மூளை உழைப்புக்கு உடல் உழைப்பென்ன குறைவா சேத்துக்குள் புழுவாக சிக்கி கிடப்பது எளிதா
ஆண்: உற்பத்தி செஞ்சவன் உப்புக்கும் பருப்புக்கும் ஓடாக தேய்வதென்ன இதத்தான் நினைக்க எவருக்கும் நேரம் இல்லே பொழப்பு நடத்த பூமிக்குள் ஈரம் இல்லே விவசாயி துன்பம் என்ன அந்த விவரத்த சொல்ல வந்தோம் விவசாயி துன்பம் என்ன அந்த விவரத்த சொல்ல வந்தோம்
ஆண்: உழுதானே உழுதானே விவசாயி உழுதானே யாருக்கு என்ன வெச்சான் அட யாருக்கு என்ன வெச்சான் மனைவிக்கும் மகனுக்கும் மகன் பெத்த மகனுக்கும் கடன் தானே மிச்சம் வெச்சான் வெறும் கடன் தானே மிச்சம் வெச்சான்
ஆண்: ஊமை சனம் படும்பாடு சொல்ல மொழி இல்லையே கலை இலக்கியம் எங்கள் துன்பம் சொல்லவில்லையே ஊமை சனம் படும்பாடு சொல்ல மொழி இல்லையே கலை இலக்கியம் எங்கள் துன்பம் சொல்லவில்லையே
ஆண்: வீதி வரை வந்த சினிமாவும் டிராமாவும் வீட்டுக்குள் வந்ததில்ல வீதி வரை வந்த சினிமாவும் டிராமாவும் வீட்டுக்குள் வந்ததில்ல சொல்லத்தான் நெனச்சோம் சொல்ல தெரிஞ்சுகிட்டோம் எதுவும் நடக்கும் எண்ணி துணிஞ்சுவிட்டோம்
ஆண்: உழுகின்ற வாழ்க்கை என்ன அதை உழுபவன் சொன்னாலென்ன உழுகின்ற வாழ்க்கை என்ன அதை உழுபவன் சொன்னாலென்ன
ஆண்: உழுதானே உழுதானே விவசாயி உழுதானே யாருக்கு என்ன வெச்சான் அட யாருக்கு என்ன வெச்சான் மனைவிக்கும் மகனுக்கும் மகன் பெத்த மகனுக்கும் கடன் தானே மிச்சம் வெச்சான் வெறும் கடன் தானே மிச்சம் வெச்சான்
ஆண்: வெள்ளை வேட்டி கட்டி அள்ளி தின்னுகிற பொழப்பா புழுதிக்குள் புருசன பொஞ்சாதி பார்த்தாலும் வெறுப்பா வெள்ளை வேட்டி கட்டி அள்ளி தின்னுகிற பொழப்பா புழுதிக்குள் புருசன பொஞ்சாதி பார்த்தாலும் வெறுப்பா
ஆண்: வெயிலுக்கு நீர் மோரு கூழுக்கு வெங்காயம் வேறேதும் இன்பம் இல்லே வெயிலுக்கு நீர் மோரு கூழுக்கு வெங்காயம் வேறேதும் இன்பம் இல்லே
ஆண்: உழைச்சு உழைச்சு உள்ள உயிர் இல்லையே இறக்கும் வரைக்கும் நல்ல கதி இல்லையே ஏரு பிடிச்ச இனம் இனி கொடி பிடிக்கட்டுமே ஏரு பிடிச்ச இனம் பச்சக் கொடி பிடிக்கட்டுமே
ஆண்: உழுதானே உழுதானே விவசாயி உழுதானே யாருக்கு என்ன வெச்சான் அட யாருக்கு என்ன வெச்சான் மனைவிக்கும் மகனுக்கும் மகன் பெத்த மகனுக்கும் கடன் தானே மிச்சம் வெச்சான் வெறும் கடன் தானே மிச்சம் வெச்சான்
ஆண்: உழுதிட்டு ஏர் விட்டு விதையிட்டு பயிரிட்டு அடிபட்டு கண்ணீர் விட்டான் கண்ணீர துடைக்க வந்தவங்க அத காசு பண்ணப் பாத்தாங்க
ஆண்: துன்பத்த எல்லாரும் சொன்னாங்க அத துடைக்கும் வழியும் என்னாங்க துன்பத்த எல்லாரும் சொன்னாங்க அத துடைக்கும் வழியும் என்னாங்க…