Lyricist Thamarai

உயிரிலே எனது உயிரிலே பாடல் வரிகள்

உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய்

ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே

உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய்

அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு

இது நடந்திட கூடுமோ இரு துருவங்கள் சேருமா உச்சரித்து நீயும் விலக
தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ

உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய்

ஏதோ ஒன்று என்னை தடுக்குதே பெண் தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே

வா வந்து என்னை சேர்ந்திடு என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே…

Movie: Vettaiyaadu Vilaiyaadu
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj