Lyricist Vairamuthu

உயிர் கொண்ட ரோஜாவே பாடல் வரிகள்

ம்ம்ம் உயிர் கொண்ட ரோஜாவே ரோஜாவே ரோஜாவே
உயிர் வாங்கும் ரோஜாவே ரோஜாவே ரோஜாவே

உயிர் கொண்ட ரோஜாவே உயிர் வாங்கும் ரோஜாவே 
கிள்ளி போகவே வந்தேன்

பக்கம் வந்த ரோஜாபூ பக்தன் என்று சொல்லியதால்
பூஜை அறையில் வைத்தேன்

அன்று காதலனா இன்று காவலனா விதி சொன்ன கதை
இதுதானா நெஞ்சமே

ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்

ரோஜா… கூட்டம் ரோஜா… கூட்டம் தூரத்தில் இருக்கையில்
அண்மையில் இருந்தாய் அடிவான் நிலவாக 
அண்மையில் வந்ததும் தூரத்தில் தொலைந்தாய் கரைமேல் அலையாக

கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது உள்ளத்தில் நில நடுக்கம்
ஒரு சொர்க்கத்துக்குள் சிறு நரகமடி என் முகமேதான் முகம் மூடி பாரடி…

ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்

கண்களில் இருந்து உறக்கத்தை முறித்து இரவில் எரித்துவிட்டேன்
நெஞ்சத்தில் இருந்து காதலை உறித்து பாதியில் நிறுத்திவிட்டேன்

ஒரு சில சமயம் உயிர் விட நினைத்தேன் உனக்கே உயிர் சுமந்தேன்
அடி சினேகிதியே முன் காதலியே என் நெஞ்சோடு, என் காதல் வேகட்டும்

ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம் ரோஜா கூட்டம் ரோஜா கூட்டம்…
அருகில் ரோஜா கூட்டம் நடுவில் முள்ளின் தோட்டம்
ரோஜா கூட்டம் ரோஜா கூட்டம் ஒஒ ரோஜா கூட்டம்…

Movie: Roja Kootam
Lyrics: Vairamuthu
Music: Bharadwaj

Leave a Reply