Urimayai Meetpom Song Lyrics

Movie: Kaala (2018)
Music: Santhosh Narayanan
Lyricists: Arivu
Singers: Vijayprakash and Ananthu

Added Date: Feb 11, 2022

ஆண்: உரிமையை மீட்போம் ஓஓஓ ஓஓஓ ஓ ம்ம் உரிமையை மீட்போம் உரிமையை .. மீட்போம் உரிமையை மீட்போம் உரிமையை மீட்போம் ஓஓஓ ஓஓஓ ஓ ஓ ம்ம் ………

ஆண்: யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா

குழு: யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா

ஆண்: ஹே யே எவனோ வந்து வெதைச்சான் அத எவனோ வந்து அறுத்தான் ரொம்ப கருத்தா அத வளத்த இவன் பசியா துடிச்சான்

ஆண்: மொறையா தல மொறையா வழி வழியா இன மொழியா அட பிரிந்தே கிடந்தவனும் இப்ப நிமிர்ந்தான் நிமிர்ந்தான்

குழு: நிலமே எங்க உரிமை நிலமே எங்க உரிமை உரிமை உரிமை நிலமே எங்க உரிமை நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

ஆண்: ஹே யே இடியா ஒரு புயலா வந்து இறங்கும் நம்ம படையும் அத தடுத்தா எந்த கரையும் இனி உடையும் உடையும்

ஆண்: விதையா சின்ன விதையா வந்து விழுந்தோம் சிறு துளியா சதை கிழிந்தே மெல்ல எழுந்தோம் பெரும் மழையா மழையா

ஆண்: ஆஹா புழுதி உடையாய் அணிந்தே வியர்வை நெடியால் குனிந்தே குருதி வழியா வரைந்தோம் அது தான் உலகே

ஆண்: ஆஹா விடியும் விடியும் என்றே இருளில் கிடந்தோம் இன்றே ஒளியை திறந்தோம் ஒன்றாய் சேர்ந்தே சேர்ந்தே

குழு: நிலமே எங்க உரிமை நிலமே எங்க உரிமை உரிமை உரிமை நிலமே எங்க உரிமை நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

குழு: யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா

ஆண்: நிலமே ….. எங்கள் உரிமை ….

ஆண்: ஆளவும் வழி இல்லடா அடிமையும் நீ இல்லடா காடெல்லாம் மேடெல்லாம் முளைச்சது உன் நிலம் டா அடங்கி வாழ்ந்தாக்கா முடியாதம்மா உரிமையை வாங்காம உயிர் போகுமா

ஆண்: எழுந்து வாடா வாடா எதிர்த்து நீ கேளு டா பயந்தா ஆகாது டா இனமே உன் கூடத்தான் நெலத்தை மீட்டுக்கலாம் நிலமை மாத்திக்கலாம் ஒன்னாக இருந்தா இனி நம்ம காலம் தான்

குழு: நிலமே எங்க உரிமை நிலமே எங்க உரிமை உரிமை உரிமை நிலமே எங்க உரிமை நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண்: வண்ணங்கள தீட்டு இது வானவில்லின் கூத்து அட சொந்தம் எது கேட்டா அந்த விண்மீன காட்டு கதவில்லாத கூட்டில் கனவுகள் ஏராளம் உண்டு உரிமைக்கு ஒன்றாகும் வீட்டில் விடுதலை எப்போதும் உண்டு

ஆண்: அதிகாரம் தொட்டு நினைப்ப மாத்தி காட்டு உழைக்கும் கைகளுக்கே நாடு நாடு அடக்கும் காலமில்ல நமக்கும் வேலி இல்ல வெடித்து போராடலாம் பயமே இல்ல

குழு: நிலமே எங்க உரிமை நிலமே எங்க உரிமை உரிமை உரிமை நிலமே எங்க உரிமை நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

ஆண்: உரிமை

குழு: யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா

ஆண்: உரிமையை மீட்போம் உரிமையை மீட்போம் உரிமையை மீட்போம்

குழு: யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா

ஆண்: உரிமை … மீட்போம்
குழு: மீட்போம் மீட்போம் மீட்போம் உரிமையை மீட்போம்
ஆண்: உரிமையை மீட்போம்
குழு: மீட்போம் மீட்போம் மீட்போம் உரிமையை மீட்போம்
ஆண்: உரிமையை மீட்போம் உரிமையை மீட்போம்

குழு: யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா