Movie: Desam (2002)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: A. R. Rahman
Added Date: Feb 11, 2022
ஆண்: உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
ஆண்: அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை நிழல் போல் வராதா அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா
ஆண்: வானம் எங்கும் பறந்தாலும் பறவை என்றும் தன் கூட்டில் உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் என்றும் தாய் நாட்டில்
ஆண்: சந்தர்ப்பங்கள் வாயிந்தாலும் அங்கு செல்வ மரம் காய்த்தாலும் உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா
ஆண்: உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
குழு: ………….
ஆண்: கங்கை உன்னை அழைக்கிறது யமுனை உன்னை அழைக்கிறது இமயம் உன்னை அழைக்கிறது பல சமயம் உன்னை அழைக்கிறது
ஆண்: கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க கட்டி காத்த உறவுகள் அழைக்க நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க
ஆண்: உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
குழு: …………
ஆண்: பால் போல உள்ள வெண்ணிலவு பார்த்தால் சிறு கரை இருக்கு மலர் போல் உள்ள தாய் மண்ணில் மாறாத சில வலி இருக்கு
ஆண்: கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள் அதில் செழிக்க வேண்டும் உண்மைகள் இந்த தேசம் உயரட்டும் உன்னாலே மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே அன்பு தாயின் மடி உன்னை அழைக்குதே தமிழா
ஆண்: உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
குழு: ………….