Ashok Kumar cover

Movie: Ashok Kumar (1941)
Music: Alandur Sivasubramaniyam
Lyricists: Udumalai Narayanakavi
Singers: M. K. Thiyagaraja Bagavathar

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னையே அன்புடன் வாரியணைக்கும் உன்னையே அன்புடன் வாரியணைக்கும் அன்னையே ஊணினைத் தேடவும் சென்றாள்.ஆ.

ஆண்: விதி வசமிதே கண்ணை இழந்தேன் காணவுமில்லேன் என் கண்ணை இழந்தேன் காணவுமில்லேன் கண்மணி நீயே கண்ணுறங்காயே கண்மணி நீயே கண்ணுறங்காயே

ஆண்: வானமுதே தேனே வாழ்குல சீமானே வானமுதே தேனே வாழ்குல சீமானே வளர் கண் தாலேலோ வளர் கண் தாலேலோ

ஆண்: புன்னகை மாமுக கனி பிழி ரஸமே..ஏ… கனி பிழி ரஸமே

ஆண்: தாதியர் சூழத் தங்க மஞ்சமேலுறங்க…ஆ. மஞ்சமேலுறங்க

ஆண்: தாதியர் சூழத் தங்க மஞ்சமேலுறங்க…ஆ… விழிகள் குளிரக்காணும் பூஜை செய்திலோமே பூஜை செய்திலோமே தங்கமே ஏழை எமதாவியும் நீயே தங்கமே ஏழை எமதாவியும் நீயே ஆவியும் நீயே