Chinna Kuyil Paaduthu cover

Movie: Chinna Kuyil Paaduthu (1987)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னை நானே..அழைத்தேனே அழைத்தேனே…அழைத்தேனே… உயிர் நீதான்.. இளமானே இளமானே இளமானே

பெண்: உன்னை நானே.. அழைத்தேனே உயிர் நீதான்.. இளமானே உன்னை நானே.. அழைத்தேனே உயிர் நீதான்.. இளமானே

பெண்: பாடல் ஆயிரம் பாடிட வேண்டும் வாழும் காலங்கள் தோறும் வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து நாளும் வாழ்த்துக்கள் கூறும்…

பெண்: உன்னை நானே..அழைத்தேனே உயிர் நீதான்..இளமானே

பெண்: சோறூட்டி நாள் எல்லாம் பசியாறப் பார்த்ததும் சீராட்டி நான் உனை தோள் மீது சேர்த்ததும் ஏதோ கனவானது ஏட்டில் கதை ஆனது ஆனால் அதன் ஞாபகம் நெஞ்சில் நிழலாடுது

பெண்: பெற்றெடுத்த அன்னை இவள் விண்ணில் இருக்க பிள்ளை முகம் எப்பொழுதும் கண்ணில் இருக்க மண் மூடிப் போனாலும் வெவ்வேறு ஆனாலும் என் ஜீவன் எந்நாளும் உன்னோடு தான்..

பெண்: உன்னை நானே..அழைத்தேனே உயிர் நீதான்..இளமானே

பெண்: வேறாரும் தாய் என உருமாறக் கூடுமா உப்புக் கல் வைரமாய் ஒரு போதும் மாறுமா தாரம் இரண்டாகலாம் தந்தை இணை சேரலாம் அன்னை இரண்டாகுமோ ஊரில் இரு வானமோ

பெண்: வந்தவனின் சொந்தம் இங்கு கட்டில் வரைதான் என்னுடைய பந்தம் இங்கு தொட்டில் வரைதான் காணாமல் நின்றாலும் காற்றாகிச் சென்றாலும் கண்ணா என் காலங்கள் உன்னோடுதான்…