Lyricist Annamalai

உன்னை கண்ட பாடல் வரிகள்

உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது

விழுந்தாய் என் விழியில் கலந்தாய் என் உயிரில் நொடியில்
உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது

எனது தோளில் தலையை சாய்த்து நெருங்கி நீ வாழ வேண்டும்
பிரிந்து நீயும் நடக்கும் போது என் இதயம் காயம் படும்

விழிகள் பார்த்து விரல்கள் கோர்த்து மடியில் நான் தூங்க வேண்டும்
உனது அன்பில் கரையும்போது உதட்டில் பூ பூத்திடும்

உலகமே மறக்கிறேன் சிறகில்லை பறக்கிறேன்
மழை இல்லை நனைகிறேன் உன்னில் கரைகிறேன்

உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது

சிரித்து பேசும் உனது வார்த்தை தினமும் நான் கேட்கவேண்டும்
உறவு என்று எவருமில்லை என் உலகம் நீ ஆகிடும்

இதயம் தன்னில் அறைகள் நான்கில் எனக்கு நீ மட்டும் வேண்டும்
தரையின் மேலே நிழலை போலே இணைந்து நாம் வாழனும்

உதடுகள் சிரிக்கிறேன் உலகினை ரசிக்கிறேன்
உனக்கென இருக்கிறேன் நெஞ்சில் சுமக்கிறேன்..

உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது…

Movie: Salim
Lyrics: Annamalai
Music: Vijay Antony