Unavu Sellavillai Sagiye (Male) Song Lyrics

Movie: Samsarame Saranam (1989)
Music: Gangai Amaran
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை… உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை

ஆண்: மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை..

ஆண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..

குழு: ………..

ஆண்: பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி.. பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி… கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி…ஈ.. கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி

ஆண்: நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்..

ஆண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.. உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை….

குழு: ……………

ஆண்: கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல் கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்

ஆண்: இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான் இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்…

ஆண்: வினவக் கண் விழித்தேன் சகியே மேனி மறைந்து விட்டான் மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடி…

ஆண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை… உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை

ஆண்: மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை

ஆண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..ஹே ஹே உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை…