Lyricist Vivek

உல்லாலா உல்லாலா பாடல் வரிகள்

ஹே எத்தன சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேல..
நீ மனசு வச்சிப்புட்டா ரசிக்க முடியும் உன்னால..

நீ சிந்துர கண்ணீரும் இங்க நிரந்தரம் இல்ல..
இதை புரிஞ்சிக்கிட்டாலே இங்க நீதாண்டா ஆள..

கண்ண கட்டிக்கிட்டு எல்லாம் இருட்டுனு
நீ கூவாத கூவாதப்பா..

வட்டம் போட்டுக்கிட்டு சின்ன உலகத்தில்
நீ வாழாத வாழாதப்பா..

என்ன பார்.. நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்..
ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்..

டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்..
உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா..

ரிப்பறிரப்பாரே.. ரிப்பரே ரிப்பறிரப்பாரே..
ரிப்பறிரப்பாரே.. ரிப்பரே ரிப்பறிரப்பாரே..
ரிப்பறிரப்பாரே.. ரிப்பப்ப ரபபப்பா..

உனக்காக நில்லு எதுவெனும் சொல்லு..
சந்தோஷம் கொடுக்காத எதுனாலும் தள்ளு..

அசராத தில்லு இருந்தா நீ சொல்லு..
என் ஆளு ராஜா நீ என் கூட நில்லு..

கையில் கிடைச்சது தொலைஞ்சா இன்னும்
ரொம்ப புடிச்சது கிடைக்கும்…

ஆனா.. ஆச அடக்கிட தெரிஞ்சா
எல்லாம் இங்க காலடியில் கிடக்கும்…

என்ன பார்.. நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்..
ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்..

டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்
உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா..

பார்.. நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்..
ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்..

டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்
உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா..

ஹே எத்தன சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேல..
நீ மனசு வச்சிப்புட்டா ரசிக்க முடியும் உன்னால..

நீ சிந்துர கண்ணீரும் இங்க நிரந்தரம் இல்ல..
இதை புரிஞ்சிக்கிட்டாலே இங்க நீதாண்டா ஆள..

ரிப்பறிரப்பாரே.. ரிப்பரே ரிப்பறிரப்பாரே..
ரிப்பறிரப்பாரே.. ரிப்பரே ரிப்பறிரப்பாரே..
ரிப்பறிரப்பாரே.. ரிப்பப்ப ரபபப்பா…

Movie: Petta
Lyrics: Vivek
Music: Anirudh Ravichandran