Ulagam Unnai Song Lyrics

Movie: Salim (2014)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Prabhu Pandala

Added Date: Feb 11, 2022

குழு: { உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே } (2)

ஆண்: உலகம் உன்னை கை கழுவினாலும் நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும் முடியும் வரை முட்டி மோதி பாரு ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே

ஆண்: நல்லவன் யாரு கெட்டவன் யாரு உத்தமன் இங்கே உலகத்தில் யாரு நீ கூறு

ஆண்: போனது போச்சி ஆனது ஆச்சி போனது போச்சுது ஆனது ஆச்சுது போடு போடு தூக்கி போடு

ஆண்: டங்கு நக்கு டங்கு நக்கு நக்கு நக்கு டங்கு நக்கு டங்கு நக்கு நக்கு நக்கு

ஆண்: தப்பான ஆளுக்கு பணிந்துவிடாதே உன்னை நீ ஒருசாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே கண் முன்னே அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே

ஆண்: உயிர் தானே போகும் போகட்டும் போடா போனாலும் தப்பே இல்லை கடவுள் உன்பக்கம் உனக்கென்ன துக்கம் போனது போச்சுது ஆனது ஆச்சுது போடு போடு துாக்கி போடு

குழு: { உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே } (2)

ஆண்: உலகம் உன்னை கை கழுவினாலும் நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும் முடியும் வரை முட்டி மோதி பாரு ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே

ஆண்: உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே உலகத்தில் உனக்காக மட்டும் வாழ்ந்து செத்துவிடாதே காயங்கள் இருந்தாலும் கலங்கிவிடாதே நீ சிந்தும் கண்ணீரில் ஒருபோதும் கறைந்துவிடாதே

ஆண்: மதயானை பாதம் மிதித்தாலும் கூட சாகாமல் நீ வாழுவாய் மலைபோல விழுந்து நதிபோல் எழுவாய் போனது போச்சுது ஆனது ஆச்சுது போடு போடு தூக்கி போடு

குழு: { உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே } (2)

ஆண்: உலகம் உன்னை கை கழுவினாலும் நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும் முடியும் வரை முட்டி மோதி பாரு ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே

ஆண்: நல்லவன் யாரு கெட்டவன் யாரு உத்தமன் இங்கே உலகத்தில் யாரு நீ கூறு

ஆண்: போனது போச்சி ஆனது ஆச்சி போனது போச்சுது ஆனது ஆச்சுது போடு போடு தூக்கி போடு

குழு: { உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே } (2)

ஆண்: உலகம் உன்னை கை கழுவினாலும் நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும் முடியும் வரை முட்டி மோதி பாரு ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே

ஆண்: டங்கு நக்கு டங்கு நக்கு நக்கு நக்கு டங்கு நக்கு டங்கு நக்கு நக்கு நக்கு

ஆண்: விதி வந்து விழுந்தாலும் நொறுங்கி விடாதே உன்னை கொல்ல படை நூறு வந்தாலும் பயந்து விடாதே வேடிக்கை மனிதர் போல் இருந்து விடாதே நீ இந்த மண்ணுக்கு சுமை ஆகி அழிந்து விடாதே