Lyricist Arivumathi

உதயா உதயா பாடல் வரிகள்

உதயா உதயா உளருகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்…
காதல்… தீண்டவே காதல்… தீண்டவே கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே உதயா உதயா உளருகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்…காதல்…காதல்…

உன் பாதி வாழ்கிறேன் என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே என்னாளும்…

உதயா உதயா உளருகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…காதல்…காதல்..

என்னை தொலைத்துவிட்டேன் என் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால் என் என்னை தொலைத்துவிட்டேன்

ஏனோ ஏனேனோ தொலைந்தே மீண்டேனோ…
ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ ஆயுள் ஆனவளே..
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும் காதல்… தீண்டவே

மூச்சின் குழிகளிலே உயிர் ஊற்றி அனுப்பி வைத்தேன்
கூச்சம் வருகையிலே உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ

ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ.. தாயும் ஆனவனே
என் நேற்றின் பாலையில் ஊற்றை திறந்து காதல்…

காதல்… தீண்டவே காதல்… தீண்டவே கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே உன்னாலே தன்னாலே

உயிரே உயிரே உளருகிறேன் உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்
உதயா உதயா உளருகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்…காதல்…

Movie: Udhaya
Lyrics: Arivumathi
Music: A. R. Rahman