Lyricist Snehan

தோழா தோழா பாடல் வரிகள்

தோழா தோழா கனவு தோழா 
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும் 
உன்ன நான்புரிஞ்சுக்கணும் 
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா

நட்புக்குள் பொய்கள் கிடையாது 
நட்புக்குள் தவறுகள் நடக்காது 
நட்புக்குள் தன்னலம் இருக்காது 
நட்புக்கு ஆண் பெண் தெரியாது 
நட்பு என்னும் நூல் எடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து

நட்பு நட்புதான் காதல் காதல்தான் 
காதல் மாறலாம் நட்பு மாறுமா

காதல் ஒன்றும் தவறே இல்லை 
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக மாறியப்பின் சொல்லிய உண்மை

நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா 
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா

தோழா தோழா கனவு தோழா 
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்

நீயும் நானும் வெகு நேரம் 
மனம் விட்டு பேசி சிரித்தாலும் 
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி

புரிதலில் காதல் இல்லையடி 
பிரிதலில் காதல் சொல்லுமடி 
காதல் காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை சொல்லும் 
பிரியமான காதலும் கூட 
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்

ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆன்.. இது கரெக்ட்

அது ஆயுள் முழுதும் கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழா கனவு தோழா 
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்

உன்ன நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும் கலங்கப்படாம பார்த்துக்கலாம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் 
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

Movie: Pandavar Bhoomi
Lyrics: Snehan
Music: Bharathwaj

Leave a Reply