Lyricist Ilaiyaraaja

தோப்பிலே இருந்தாலும் பாடல் வரிகள்

ஆடிக் காத்தில் அம்மியே பறந்தால் ஆலிலைகள் என்னாகும்
அடி மேல் அடி விழுந்தால் மனிதனிவன் நெஞ்சமிங்கு புண்ணாகும்

வரும் துன்பம் ஏற்க முடியாது என்றே
எவனாலும் சொல்ல முடியாது போடா
வருவதை எல்லாம் ஏற்றுக் கொள்

தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனி தான்
கூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்

சமுதாயம் என்ன போடா வீடு வாசல் என்ன போடா
சமுதாயம் என்ன போடா வீடு வாசல் என்ன போடா
அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும் உறவுகள் பந்தம் என்ன போடா

தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்

தாய் தந்தை ஆனாலும் தாரமாக இருந்தாலும்
தலைவலியே உனக்கு வந்தால் தாங்கிக் கொள்ள முடியுமா

தமையனாக ஆனாலும் தங்கையாக இருந்தாலும்
உனது நெஞ்சின் துயரம் அதை மாற்றிக் கொள்ள முடியுமா

அட மண்ணை பிளந்து போடு மண்ணு உன்னை தாங்கும் பாரு
அதைப் போல நீயும் மாறு துன்பம் தாங்கித் தாங்கிப் பாரு
எது வந்தால் என்ன வந்து போனால் என்ன
இங்கு மாறாது மாறாது வானம்தான்

தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்

வேஷம் போட்டு வந்தவர் தான் எத்தனையோ மேடையிலே
ஆடியவர் யார் யாரோ அத்தனையும் பார்த்தேனே

வீடும் இங்கு காடாச்சு வேடந்தாங்கல் போலாச்சு
வந்த பறவை பறந்தாச்சு ஓய்வு காலம் போயாச்சு

வலி தாங்கி பழகிப் போச்சு இடி தாங்கிக் கம்பி ஆச்சு
இங்கு மேடு பள்ளம் ஏது குழி தாண்டிப் பழக்கம் ஆச்சு
எது வந்தால் என்ன வந்து போனால் என்ன
என்றும் மாறாது மாறாது வானம்தான்

தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்

சமுதாயம் என்ன போடா வீடு வாசல் என்ன போடா
சமுதாயம் என்ன போடா வீடு வாசல் என்ன போடா
அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும் உறவுகள் பந்தம் என்ன போடா

தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்…

Movie: Ponmana Selvan
Lyrics: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja