100% Kadhal cover

Movie: 100% Kadhal (2018)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Mohan Rajan
Singers: Harini

Added Date: Feb 11, 2022

பெண்கள்: திரு திரு கண நாதா தன தோம் தோம் தித்தை தீச்சுடர் விழியோனே தன தோம் தோம் தித்தை

பெண்கள்: வெண்பாவும் செம்பூவும் உன்னை வாழ்த்தத்தானே தேனோடு தினைமாவும் உனக்காகத்தானே

பெண்: லேசாய் லேசாய் கண் பாரைய்யா மறை சொன்ன இறையாளன் நீதானைய்யா லேசாய் லேசாய் காப்பாற்றைய்யா சிரம் தாழ்த்த வரம்யேனும் கொடையாலனே

பெண்: புறம் நோக்கி அகம் காக்கும் மாயக்காரா கனம்போக்கி கரம் கோர்க்கும் பாசக்காரா இடர் நீக்கி சுடர் ஏற்றும் காவல்காரா சுகம் காத்து சுமை போக்கும் நேசக்காரா

பெண்: லேசாய் லேசாய் கண் பாரைய்யா மறை சொன்ன இறையாளன் நீதானைய்யா

பெண்: நூற்றுக்கு நூறு வாங்க ஆசை இல்லை பாஸ் ஆகும் அளவுக்கு தேற்றிவிடு சையன்டிஸ்டின் ஐ க்யூவா தேவை இல்லை கொடுத்தாலும் அதை கொஞ்சம் குயிக்காய் கொடு

பெண்: கிண்டி பிரிஜ்ஜில் என் பேனர் வைக்கும் மார்க்கு வேண்டாமே லாஸ்ட்டு பெஞ்சு உன்னாலே அட கொஞ்சூண்டு முன்னேற நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு

பெண்கள்: திரு திரு கண நாதா தன தோம் தோம் தித்தை தீச்சுடர் விழியோனே தன தோம் தோம் தித்தை

பெண்: கம்ப்யூட்டர் வரும் முன்னே மவுஸ்சை வைத்து விளையாண்ட விஞ்ஞானி நீதானப்பா அம்மாவும் அப்பாவும் உலகம் என்று ரௌண்ட்ஸ் வந்த ஐன்ஸ்டைனும் நீதானப்பா

பெண்: பெஸ்ட்டு மார்க்கு வேண்டாமே ஜஸ்ட் பாஸ்சு போதுமே ரெஸ்ட் கொஞ்சம் இல்லாம அட எனக்காக நீ கொஞ்சம் ஹார்டுவொர்க்கு செய்வாயோ

பெண்கள்: திரு திரு கணநாதா தன தோம் தோம் தித்தை தீச்சுடர் விழியோனே தன தோம் தோம் தித்தை

பெண்கள்: வெண்பாவும் செம்பூவும் உன்னை வாழ்த்தத்தானே தேனோடு தினைமாவும் உனக்காகத்தானே