புலமைப்பித்தன்

Thenpandi Mutharame Song Lyrics

Movie: Veetuku Oru Kannagi (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jairam and S. N. Surendar

Added Date: Feb 11, 2022

ஆண்: தென்பாண்டி முத்தாரமே உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே.. தென்பாண்டி முத்தாரமே உந்தன் தேகத்தில் செந்தூரமே..ஏ… பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம் என் தேகம் சூடானதே..ஏ.ஏ.

பெண்: சோக்காத்தான் நீ கீறியே சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே..ஏ..ஏ.. சோக்காத்தான் நீ கீறியே அய்யே சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே..ஏ.. வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள ஒன்னாட்டம் ஆளேதய்யா…

ஆண்: முத்துமகள் கன்னத்தில் மோகரச எண்ணத்தில் பத்து விரல் படாமல் முத்திரைகள் இடாமல் என் நெஞ்சும் என் கண்ணும் தூங்காது

பெண்: வந்துக்குன்னா உஷாரு வராங்காட்டி பேஜாரு டபாய்க்காதே என்னாண்ட குந்திக்கய்யா முன்னாண்ட கண்ணால என்ன நீ துண்ணாதே…யோவ்…

ஆண்: உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு உன் பேச்சே காவியம்தானே தேனே…

பெண்: சோக்காத்தான் நீ கீறியே யோவ் சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே..ஏ..ஏ.. சோக்காத்தான் நீ கீறியே அய்ய

பெண்: ……..
ஆண்: ………

பெண்: லவ்வுல நீ கில்லாடி அள்ளிக்கய்யா முன்னாடி வாராவதி வாத்யாரே வலிச்சுக்கய்யா வுடாதே டபாய்ச்சா செல்லாது என்னாண்ட ஆமா…

ஆண்: சென்னைத் தமிழ் சிங்காரி செண்டு கட்டும் ஒய்யாரி உந்தன் மொழி கேட்டேனே நானுமின்று கெட்டேனே இந்நாளே என்னாண்ட சவாலா

ஆண்: கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம் கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம் சல்பட்டா சரக்குடி நீதான் கண்ணு..

பெண்: சோக்காத்தான் நீ கீறியே
ஆண்: தகஜூனுதா
பெண்: சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே..ஏ..ஏ.. சோக்காத்தான் நீ கீறியே
ஆண்: ஜணுஜணுத்தா
பெண்: சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே..ஏ..ஏ.. வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள ஒன்னாட்டம் ஆளேதய்யா…

ஆண்: தென்பாண்டி முத்தாரமே
பெண்: யோவ்
ஆண்: உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே.. தென்பாண்டி முத்தாரமே
பெண்: ஐயோ
ஆண்: உந்தன் தேகத்தில் செந்தூரமே..ஏ… பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம் என் தேகம் சூடானதே..ஏ.ஏ.