Thennamara Thopukkulle Female Song Lyrics

Movie: Therku Theru Machan (1992)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே.

பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே.
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே.

பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே

பெண்: மாமா உன் பேரச் சொன்னா
மரிக்கொழுந்து வாசம்
ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம்
மாமா உன் பேரச் சொன்னா
மரிக்கொழுந்து வாசம்
ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம்

பெண்: புது முகமாக.. அறிமுகம் ஆனேன்
அறிமுக நாளே உன்.. அடைக்கலமானேன்
இனி நீ சொல்லும் வார்த்தையில் தான் நான் வாழுவேன்

பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே.
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே

பெண்: ஆத்தோரம் பூவை கிள்ளி தொடுத்து வெச்சேன் மாலை
காத்தோட உரசுது ஐயா காஞ்சி பட்டு சேலை
ஆத்தோரம் பூவை கிள்ளி தொடுத்து வெச்சேன் மாலை
காத்தோட உரசுது ஐயா காஞ்சி பட்டு சேலை

பெண்: உனக்கென நானே அவதரித்தேனே
கனவுகளாலே நெஞ்சை அலங்கரித்தேனே
இனி பூஞ்சோல குயிலபோல நான்.. பாடுவேன்

பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே.
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே.

பெண்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே.