Lyricist Vairamuthu

தென்றலுக்கு தெரியுமா பாடல் வரிகள்

ஏ.. ஏ… ஏய்… ஏ… ஏய்… ஏ……ஏ…ஏ……
சேத்து மட தொறக்க செவ்வாள மீன் துடிக்க
தாவி குதிச்ச மீனு தாவணிக்குள் விழுந்துவிட
பாம்பு புகுந்ததுன்னு பருவ பொண்ணு கூச்சலிட

முறைமாமன் ஓடிவந்து முந்தானைக்குள் மீன் எடுக்க
வாலமீன புடிக்க வந்து சேலை மீன புடிச்சதென்ன ஓ…
ஆ ஆ ஆ ஆ… ஆ… ஆ … ஆ…

தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு

தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
அது பாசமெனும் பாட்டு அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு

உள்ளங்கையில் வந்து தேன் விழுந்தா அத உறிஞ்சி குடிப்பதில் தப்பிருக்கா
வண்ண சிறுக்கொடி பூத்திருக்க வண்டு கண்ண மூடிக்கொண்டால் அர்த்தமுண்டா

வானத்தில நிலா பூத்திருக்கு வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா
மாட்டுக்கொம்பில் வந்து பால் கறக்க மனம் ஆசப்பட்டா அதில் தோதிருக்கா

எறும்பு ஊற கல்லும் தேயும் இது தெரியாதா 
கல்ல விடவும் உள்ளம் உறுதி இது தெரியாதா
விடுகதை போட்டேன் ஒரு விடை தெரியாதா
விடுகதை போட்டேன் ஒரு விடை தெரியாதா

அட ஏன்டா பேராண்டி அதை சொல்ல தெரியலையா
நான் சொல்லி தாரேன் வாறியா எண்ணையும் தண்ணியும்…

எண்ணையும் தண்ணியும் ஒண்ணா கலந்ததில்லே கலந்ததில்லே
நெல்லை போல கோரையிருக்கும் விளைஞ்சதில்ல விளைஞ்சதில்ல

நட்டு வெச்ச நாத்து பூமிய பிடிப்பதில்ல பிடிப்பதில்ல
வேரு விட்ட பிறகு மண்ணை பிரிவதில்ல பிரிவதில்ல

பாறையில் விதைச்ச விதை பலனுக்கு வருவதில்ல
பாறையிலும் செடி முளைக்கும் ஏன் அதை பாத்ததில்ல

கல்லுல நார் உரிக்கும் கதை எங்கும் நடந்ததில்ல
கல்லுல செல செதுக்கும் கலை அது பொய்யும் இல்ல

இது விடுகதையா இல்ல விதியா என் தலை சுத்தி போச்சு
உண்மை நிலை தெரியும் அது புரியும் இது மழுப்புற பேச்சு

அட ஏன்டா பேராண்டி அவ சொன்னது கேட்கலையா
நான் சொல்லி தாரேன் வாறியா

தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு

தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு

தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு…

Movie: Bharathi Kannamma
Lyrics: Vairamuthu
Music: Deva

Leave a Reply