தென்றல் காற்றே பாடல் வரிகள்
ஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
தென்றல் காற்றே.. கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது உனை வரத்தான்..
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்
நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்
யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்
கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
என்ன செய்வது சொல்லடி முல்லையே
கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா..
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது உனை வரத்தான்
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்
காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்
என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்
இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம்
மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்
பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது உனை வரத்தான்…
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு…
Movie: Eeramana Rojave
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja