Lyricist Vaali

தென்மதுரை வைகை பாடல் வரிகள்

தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றது தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம்

தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி

நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை

தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும்
எல்லை ஒன்றாய் காணும் வானம்
எங்கும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை

கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான்
உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி

நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு

பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே
மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே

உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா என் நாளும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றது பொன் மாலை நிலா தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம்

தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி…

Movie: Dharmathin Thalaivan
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja