Lyricist Na. Muthukumar

தீராத தம்மு வேணும் பாடல் வரிகள்

தீராத தம்மு வேணும் திட்டாத அப்பு வேணும்
குறையாத குவாட்டர் வேணும் கொண்டாட நட்பு வேண்டும்

கவிதையின்னா சொல்லு வேணும் காதலுன்னா தில்ல்லு வேணும்
கேரம் போர்டு காயின் போல கண்ணு ரெண்டும் ஓட வேணும்

காதல் செஞ்சு ஜெயிச்சா நீயும் கனவாக மாற வேணும்
காதல் செஞ்சு தோத்தா நீயும் அடுத்த பொண்ண தேட வேணும்

ஷேக் எ பூம் ஷேக் எ பூம் ஷேக் எ பூம் பூம்
ஷேக் எ பூம் ஷேக் எ பூம் ஷேக் எ பூம் பூம்
ஷேக் எ பூம் ஷேக் எ பூம் ஷேக் எ பூம் பூம் வோ செக் இட் அவுட்

ஹய் ஹாஹா ஹய் ஹய் ஹாஹா ஹய் ஓ

காலேஜு போனா தலைய சீவ கண்ணாடி வச்ச சுடிதார் வேணும்
லேடிஸ் ஹாஸ்டல் உள்ளே போக சுரங்கம் தான் வேணும்

ஏய் அழகு பொண்ணு பஞ்சமின்னா
ஐஸ்வர்யா ராய் க்ளோனிங் வேணும்
தங்கமான பொண்ணு இன்னா உரசி பார்க்கணும்

பில்கேட்ஸு எங்களைத்தான் தத்தெடுத்து போக வேணும்
திருப்பதி உண்டியலில் தினம் ஒரு பங்கு வேணும்
சீரபுஞ்சி மழைய போல பீர் மழை பெய்ய வேணும்
சிறையில் உள்ளே காவிரி ஆறு வெயிலுதானே வெளியே வேணும்

தீராத தம்மு வேணும் திட்டாத அப்பு வேணும்
குறையாத குவாட்டர் வேணும் கொண்டாட நட்பு வேண்டும்

ஏ ஸ்டாரு ஹாட்டல் போதும் போதும்
பழச நீயும் நெனைக்க வேணும்
கையேந்தி பவனுக்கெல்லாம் நன்றி சொல்லணும்

ஹே கேட்ட உடனே வேலை கொடுக்கும்
புதிய கடவுள் பொறக்க வேணும்
ரப்பர் வச்சு வறுமை கோட்டை அழிக்க தான் வேனும்

சீக்கிரமா போகணுமா ஒன் வேயில் போக வேனும்
தேனிலவு போகனும்னா டபுள்ஸாக போக வேணும்
ஜன்னல் வச்ச ஜாக்கேட் எல்லாம் கதவு வச்சு மூட வேணும்
கன்னி தமிழு மட்டும் தானே கல்லூரி பெண்கள் பேச வேண்டும்

தீராத தம்மு வேணும் திட்டாத அப்பு வேணும்
குறையாத குவாட்டர் வேணும் கொண்டாட நட்பு வேண்டும்

காதல் செஞ்சு ஜெயிச்சா நீயும் கனவாக மாற வேணும்
காதல் செஞ்சு தோத்தா நீயும் அடுத்த பொண்ண தேட வேணும்…

Movie: Parthiban Kanavu
Lyrics: Na. Muthukumar
Music: Vidyasagar