Lyricist Vaali

தீ இல்லை பாடல் வரிகள்

தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்

ஓஹோ ஓஹோ ஓஹோ விலையாய் தந்தேனே என்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ ஆடை கொண்டதோ தென்னை

ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ

வெகு நாளாய் கேட்டேன் விழித் தூரல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே ஓஹோ

விலகாத கையைத் தொட்டு விழி ஓர மையைத் தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே

இலக்கிய கனியை விழுங்கியது விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா கண்கள் மோதாதா காதல் ஊராதா

தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய்
விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓஹோ ஓ ஓ ம்ம்ம்

புனல் மேலே வீற்று பனி வாடை காற்று புனைந்தது நமக்கொரு புது பாட்டு
கடற்கரை நாரைக் கூட்டம் கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து

சிலு சிலு என்று குளிரடிக்க தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா

தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்

ஓஹோ ஓஹோ ஓஹோ விலையாய் தந்தேனே என்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ ஆடை கொண்டதோ தென்னை…

Movie: Engeyum Kadhal
Lyrics: Vaali
Music: Harris Jayaraj