Movie: Anjatha Singam (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Aruppukottai Thavasumani
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram
Added Date: Feb 11, 2022
ஆண்: தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
ஆண்: கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு
ஆண்: தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
ஆண்: அன்புக்கொரு தாள் போட்டு அடைத்து வைக்க ஆளுமில்லை ஆகாயம் மழை பொழிந்தால் அதை தடுக்க யாருமில்லை முல்லைச் சாரமோ இவள் முத்து ரதமோ முல்லைச் சாரமோ இவள் முத்து ரதமோ
ஆண்: இசையின் ஒலி போல் என்னோடு கலந்தாள்… ஆ..ஆ…ஆ…ஆ..ஆ.. இசையின் ஒலி போல் என்னோடு கலந்தாள் இமையாய் நான் காக்க கண்ணாக மலர்ந்தாள்
ஆண்: தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
ஆண்: தங்க மகள் இவள் அருகில் தொண்டனை போல் துணை இருப்பேன் தாய் கொடுத்த என் உயிரை இவளுக்கென்று நான் கொடுப்பேன் பாசமென்பது வெறும் வேஷமில்லையே பாசமென்பது வெறும் வேஷமில்லையே
ஆண்: உறவின் உதிரம் ஒன்றாகி தொடரும் உயிரின் ஒளிப் போல் கொண்டாடி வளரும்
ஆண்: தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
பெண்: திரௌபதிக்கு கண்ணனை போல் இங்கு வந்த அண்ணன் அன்றோ தூய ஒரு அன்பு கொண்டு துணை இருக்கும் மன்னன் அன்றோ
பெண்: திரௌபதிக்கு கண்ணனை போல் இங்கு வந்த அண்ணன் அன்றோ தூய ஒரு அன்பு கொண்டு துணை இருக்கும் மன்னன் அன்றோ
பெண்: வாழ்த்திட வந்தான் என்னை காத்திட நின்றான் வாழ்த்திட வந்தான் என்னை காத்திட நின்றான் இறைவன் வரமாய் எந்நாளும் நினைத்தேன் இனிமை கனவில் எப்போதும் மிதப்பேன்
பெண்: தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த தங்கை தனை போற்றி பாட அண்ணன் உண்டு
ஆண்: கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு
ஆண்: தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு..