Lyricist Yugabharathi

தேன் தேன் தேன் பாடல் வரிகள்

தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன்

தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன் கரைந்தேன்

என்னவோ சொல்ல துணிந்தேன் ஏதேதோ செய்யத் துணிந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்

தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன்

அள்ளவரும் கையை ரசித்தேன் ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

முட்ட வரும் பொய்யை ரசித்தேன் மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன் இதழ் சொல்லாததையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன் நிதம் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்

தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன் ஆஆ ஆஆ ஆஆ

சேலையில் நிலவை அறிந்தேன் காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

திருடனே உன்னை அறிந்தேன் திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன் பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
நான் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்
நீ நடமாடும் திராட்சைத் தோட்டம் எதிரில் அறிந்தேன்

தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன்

ஏ தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன் கரைந்தேன்…

Movie: Kuruvi
Lyrics: Yugabharathi
Music: Vidyasagar