Movie: Anbulla Malare (1984)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam
Added Date: Feb 11, 2022
ஆண்: தாயே தாயே தர்மம் எங்கே பேதை வாழ்வில் சாபம் இங்கே பாவம் ஒரு ஏழை ரோஜா முள்ளாய் போனதே கண்ணில் தினம் கண்ணீர் வந்து தூறல் போடுதே
ஆண்: தாயே தாயே தர்மம் எங்கே
ஆண்: தெய்வம் பெண் என்று சொன்னாரே எல்லாம் சித்தாந்தமா பெண்ணைக் கண்ணீரில் நீராட்டி தெருவில் விட்டாரம்மா நாளும் பெண்மை போராடும்..ம். கண்ணில் கங்கை நீராடும்..ம்.. கற்பே சுமையாக ஒரு போராட்டமா வாழும் சமுதாயம் புது வாழ்வைத் தருமா
ஆண்: தாயே தாயே தர்மம் எங்கே பேதை வாழ்வில் சாபம் இங்கே பாவம் ஒரு ஏழை ரோஜா முள்ளாய் போனதே கண்ணில் தினம் கண்ணீர் வந்து தூறல் போடுதே
ஆண்: சீதை சிந்தாத கண்ணீரா இன்றும் அதே நிலை பெண்மை முன்னேறிப் போனாலும் கண்ணீர் ஒரே விலை எல்லாம் இங்கே பொய் வேஷம் ஆணின் தேவை பூ வாசம் பெண்ணே கலங்காதே இது ஆண் தேசமே பெண்மை அரசாளும் ஒரு காலம் வருமே
ஆண்: தாயே தாயே தர்மம் எங்கே பேதை வாழ்வில் சாபம் இங்கே பாவம் ஒரு ஏழை ரோஜா முள்ளாய் போனதே கண்ணில் தினம் கண்ணீர் வந்து தூறல் போடுதே
ஆண்: தாயே தாயே தர்மம் எங்கே