Hari Lyrics

தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு பாடல் வரிகள்

தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு சுமங்கலியா போனாரு

தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு சுமங்கலியா போனாரு

சிட்டாத்து தண்ணியெடுத்து தாயரம்மா தாயாரு
நீண்ட சிறப்புடனே வாழ்ந்தவரு

தாயரம்மா தாயாரு தாமிரபரணி தண்ணி குடிச்சு
தாயரம்மா தாயாரு இங்க தங்கமாக வாழ்ந்தவரு
தாயரம்மா தாயாரு

நேத்து படுத்து தூங்குனது திருநெல்வேலி டவுனுல
போதை தெளிஞ்சு எழும்பினது ஆழ்வார்குறுச்சி தெருவுல

பம்ப் செட்ட திருடினது மீசைக்காரன் வயலிலே
பார்த்தவன்தான் சாட்சி சொன்னான்
பாளையங்கோட்டை ஜெயிலிலே

தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு சுமங்கலியா போனாரு

கோளாறய்யா கோளாறு உன் கண்ணு ரெண்டும் கோளாறு
உசாரய்யா உசாரு உங்கப்பன் அங்கு நிக்காரு

காலையில எழும்புனதும் கவுந்து படுத்து தூங்குவோம்
அப்பன் திட்டும் வார்த்தை எல்லாம்
பஞ்சு வச்சு மூடுவோம் பத்து மணிக்கு பக்குவமா
பழைய சோத்த உருட்டுவோம்
பல்லு விலக்க ஆத்தா சொன்னா சாம்பலத்தான் தேடுவோம்

மாடு கழுவும் கொளத்துல மத்தியானம் முங்குவோம்
மறுபடியும் போதை ஏற முண்டக்கல்ல நக்குவோம்

ஹேய் சாயங்காலம் நேரம் வந்தா மூணு சீட்டு ஆடுவோம்
ராத்திரியில் நரிய போல ஊளையிட்டு கத்துவோம்

ஆத்தாவோட ஆசைக்கு……
ஓ ஓ ஓ ஆத்தாவோட ஆசைக்கு……
வீட்டைதான அடையணும்
உங்கொப்பனோட தொல்லைக்கு வீதியில படுக்கணும்

தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு சுமங்கலியா போனாரு
தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு சுமங்கலியா போனாரு

சேவல் கோழி போல நாங்க பொறுப்பு இல்லாம சுத்துவோம்
பொட்ட கோழி போகும் போது ஒண்ணா சேர்ந்து கூவுவோம்

ஜல்லிக்கட்டு காளை போல துள்ளிக்கிட்டு ஓடுவோம்
மல்லுகட்ட யாரும் வந்தா குண்டுகட்டா தாக்குவோம்

கரகாட்டம் பார்க்கபோனோம் கடையநல்லூர் ரோட்டுல
ஆட்டம் போட்ட அம்சாவோட இடுப்பு மடிப்பு மறக்கல

வில்லு பாட்டு கேட்கபோனோம் வீரவனல்லுரிலே பாட்டு
முடிஞ்சு எழும்பும்போது இடுப்பு வேட்டி காணலே

ஆட்டுக்கறி கோழிக்கறி இன்னைக்கு ஒன்னும் கிடைக்கல
ஆட்டுக்கறி கோழிக்கறி இன்னைக்கு ஒன்னும் கிடைக்கல
எலிகறிய சுட்டு தின்னும் ஏத்தம் இன்னும் அடங்கல இப்போ

தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு சுமங்கலியா போனாரு

தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு சுமங்கலியா போனாரு
தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு சுமங்கலியா போனாரு…

Movie: Seval
Lyrics: Hari
Music: G. V. Prakash Kumar