Arasilangkumari cover

Movie: Arasilangkumari (1961)
Music: G. Ramanathan
Lyricists: Ku. Ma. Balasubramaniam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தாரா அவர் வருவாரா தாரா அவர் வருவாரா கண்கள் தவிப்பதை தான் அறிவாரா

பெண்: மாறா அன்பு கொள்வாரா மாறா அன்பு கொள்வாரா இன்ப மழை தன்னையே பொழிவாரா தாரா அவர் வருவாரா

பெண்: தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா

பெண்: தனியா காதலுடன் உறவாடுவாரா அழைப்பாரா அணைப்பாரா அழைப்பாரா அணைப்பாரா நினைத்தாலே இன்பம் மீறுதடி

பெண்: என் தாரா அவர் வருவாரா

பெண்: இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா

பெண்: இன்ப காவியமாய் சுவையூட்டுவாரா புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா

பெண்: புகழ்வாரா மகிழ்வாரா புகழ்வாரா மகிழ்வாரா நினைத்தாலே இன்பம் மீறுதடி

பெண்: என் தாரா அவர் வருவாரா கண்கள் தவிப்பதை தான் அறிவாரா ஆஆ ஆஆ தாரா