Movie: Antha Rathirikku Satchi Illai (1982)
Music: Shankar Ganesh
Lyricists: V. Sundar Raj
Singers: S. P. Balasubrahmanyam
Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ…ஆ…ஆ…ஆஅ…ஆ..ஆ.. சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண்: பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…
ஆண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண்: பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…
ஆண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண்: மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள் மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள்
ஆண்: அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே தனக்குள்ளே போராடினாள் கரையான் அரிக்கின்ற வேராகினாள்.. கரையான் அரிக்கின்ற வேராகினாள்..
பெண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது
ஆண்: பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…
பெண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண்: முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
ஆண்: சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது புயலோடு மழை வந்தது வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது… வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது…
பெண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…
பெண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது..