Deivame Thunai cover

Movie: Deivame Thunai (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Velavan
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்… இதை சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்… சொன்னால்தான் தெரியுமோ

பெண்: பொன்னம்பல நடன மன்னன் திருக்குமரன் புள்ளி மயிலோனுக்கு உள்ளமெல்லாம் திறந்து சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை சொன்னால்தான் தெரியுமோ

பெண்: ஓடையிலே நீரோடையிலே மலர் சூடையிலே விளையாடையிலே வாசமலர் கதம்பினோடு ஜவ்வாதணிந்து வந்தான் முருகன் அந்த வழிதனிலே

பெண்: ஜாடை பல காட்டினேன் மையல் மிகுந்து சந்தமிகும் பதங்களும் பாடினேன்…. போடி கொஞ்சமும் அவன் புரிந்து கொள்ளவே இல்லை ஓடி அழைத்துக்கொண்டு வாடி மனம் திறந்து

பெண்: சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்…

பெண்: …………

ஆண்: …………

பெண்: சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் சொன்னால்தான் தெரியுமோ