Lyricist Kannadasan

சிரிப்பு வருது பாடல் வரிகள்

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது

ஹா ஹா ஹா ஹா

மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு
மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு

கீழ இறங்கி பேகும்போது சொன்னதெல்லாம் போச்சு

காச எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டு
ஆச வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு
ஹா ஹா ஹா ஹா

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு

ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு

நல்ல குணத்த மாத்து கள்ள பணத்த ஏத்து
நல்ல நேரம் பார்த்து நண்பனையே மாத்து
ஹா ஹா ஹா ஹா

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது…

Movie: Aandavan Kattalai
Lyrics: Kannadasan
Music: Viswanathan–Ramamoorthy