Aalukkoru Veedu cover

Movie: Aalukkoru Veedu (1960)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: K. Jamuna Rani and Renuka

Added Date: Feb 11, 2022

பெண்: செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம் செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம்

பெண்: கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைத்தான் நமக்கு பதவி கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைத்தான் நமக்கு பதவி

பெண்: செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம்

பெண்: பயிரை வளர்த்தால் பலனாகும் அது உயிரைக் காக்கும் உணவாகும வெயிலே நமக்கு துணையாகும் இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்

பெண்: தினம் வேலை உண்டு குல மானம் உண்டு வருங்காலம் உண்டு அதை நம்பிடுவோம்

பெண்: செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம்

பெண்: சாமிக்கு தெரியும் பூமிக்கு தெரியும் ஏழைகள் நிலைமை அந்த சாமி மறந்தாலும் பூமி தந்திடும் தகுந்த பலனை இதைப் பாடி பாடி விளையாடி ஆடிப்பல கோடி கோடி முறை கும்பிடுவோம்

பெண்: செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம்

பெண்: காயும் ஒருநாள் கனியாகும் நம் கனவும் ஒருநாள் நினைவாகும்

பெண்: ஆஅ..ஆஅ…ஆ…ஆஅ…ஆ.. ஆஅ..ஆஅ…ஆ…ஆ…ஆஅ..

பெண்: காயும் கனியும் விலையாகும் நம் கனவும் நினைவும் நிலையாகும் உடல் வாடினாலும் பசி மீறினாலும் வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்

பெண்: செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம்

பெண்: கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைத்தான் நமக்கு பதவி

பெண்: செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம்