Senthamizh Naadennum Song Lyrics

Movie: Raja Rajan (1957)
Music: K. V. Mahadevan
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Udutha Sarojini  and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

பெண்
குழு: செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

பெண்: எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

பெண்
குழு: எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

பெண்: காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருணை நதி

பெண்: ஆ..ஆஅ..ஆ…ஆ..ஆ…ஆ…ஆ… பெண்
குழு: காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருணை நதி

பெண்: என மேவிய ஆறு பலவோடத் திரு மேனி செழித்த தமிழ்நாடு…

பெண்
குழு: என மேவிய ஆறு பலவோடத் திரு மேனி செழித்த தமிழ்நாடு…

பெண்: வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

பெண்
குழு: வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

பெண்: நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு…

பெண்
குழு: நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு…

பெண்: நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை

பெண்: ஆ..ஆஅ..ஆ…ஆ..ஆ…ஆ…ஆ… பெண்
குழு: நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை

பெண்: வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

பெண்: புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

அனைவரும்: செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

கைதட்டல்கள்: …………

அனைவரும்: {செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே} (3)