Anbe Anbe cover

Movie: Anbe Anbe (2003)
Music: Bharathwaj
Lyricists: Vaali
Singers: Kay Kay and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய்..ஏய்.ஹேய் மயிலே.குயிலே.

குழு: ……..

குழு: ………..

ஆண்: ரூபா நோட்டில் சேலை கட்டி சில்லறை போல சிரிக்கும் புள்ளே

ஆண்: ஹோ ரூபா நோட்டில் சேலை கட்டி சில்லறை போல் சிரிக்கும் புள்ளே சேல பணத்த செலவு செய்ய சீக்கிரமாக வாடி உள்ள

பெண்: ஊருசனமும் தூங்கவில்ல பத்து மணிக்கு மேல வாரேன் சேவ கோழி கூவும் போது சேல தேடி அலைய போறேன்

ஆண்: உதட்டு சாயம் இப்ப வெளுக்க போறேன்
பெண்: புடவை போல உன்ன சுமக்க போறேன்

ஆண்: ஒரு வத்தி பெட்டிக்குள்ள வாழும் தித்திக்கின்ற தீப்பந்தம் நாம்தானே

பெண்: ஆக்கபொறுத்த மாமனுக்கு ஆற பொறுக்க தெரியாதையா அள்ளி திங்க அவசரபட்டா அருகில் வந்து அணைச்சுக்கோய்யா

குழு: சை சையா

பெண்: கொக்க போல கொக்க போல காத்திருக்கும் மச்சானே மீன போல நான் வந்து கொக்க கொத்தி போவனே

ஆண்: பச்சை கிளியாய் பச்சை கிளியாய் பறந்து நானும் திரிஞ்சேனே உன்னை வந்து பார்த்ததுமே ஜோசிய கிளியாய் தவிச்சேனே

பெண்: பாதி ராத்திரியில் எந்தன் படுக்கையில் நுழைஞ்சவனே
ஆண்: ஓ ரெண்டு இதழ்களினால் என்னை ஊதி அணைச்சவளே

பெண்: அட சாத்தி வச்ச பூட்ட இப்ப சாவி போட்டு துறக்கபோறேன் கூட்டாஞ்சோறு சமச்சி இப்போ சாப்பிடலாமா..ஆ.

ஆண்: ரூபா நோட்டில் சேலை கட்டி சில்லறை போல சிரிக்கும் புள்ளே சேல பணத்த செலவு செய்ய சீக்கிரமாக வாடி உள்ள

பெண்: ஊருசனமும் தூங்கவில்ல பத்து மணிக்கு மேல வாரேன் சேவ கோழி கூவும் பொது சேல தேடி அலைய போறேன்.ஆன்

குழு: சை சையா

ஆண்: ஆத்தங்கரையில் ஆத்தங்கரையில் காத்து இருக்கும் காதலியே அலைய போல நான் வந்து கொலுச திருடி போவேனே

பெண்: பாய விரிச்சு பாய விரிச்சு படுக்க போகும் மாமனே கண்கள் மூடி தூங்கினால் கனவு திருடி போவேனே

ஆண்: கையால் நீ தொட்டால் எந்தன் கண்கள் பத்திகுதே
பெண்: ஹோ விளக்கு அனைச்சதுமே உந்தன் வேர்வை தித்திக்குதே

ஆண்: இந்த ஓங்கி நிற்கும் மூங்கில் மரத்தை ஓட்டை போட்டு ஊதும் குயிலே காணும் இந்த எட்டு திசையிலும் காதல் ஓசை

ஆண்: ரூபா நோட்டில் சேலை கட்டி சில்லறை போல சிரிக்கும் புள்ளே சேல பணத்த செலவு செய்ய சீக்கிரமாக வாடி உள்ள

பெண்: ஊருசனமும் தூங்கவில்ல பத்து மணிக்கு மேல வாரேன் சேவ கோழி கூவும் பொது சேல தேடி அலைய போறேன்

ஆண்: உதட்டு சாயம் இப்ப வெளுக்க போறேன்
பெண்: புடவை போல உன்ன சுமக்க போறேன்

ஆண்: ஒரு வத்தி பெட்டிக்குள்ள வாழும் தித்திக்கின்ற தீப்பந்தம் நாம்தானே

பெண்: ஆக்கபொறுத்த மாமனுக்கு ஆற பொறுக்க தெரியாதையா அள்ளி திங்க அவசரபட்டா அருகில் வந்து அணைச்சுக்கோய்யா