Bharathi Kannamma cover

Movie: Bharathi Kannamma (1997)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Vadivelu

Added Date: Feb 11, 2022

ஆண்: ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு எந்த பொண்ணுதான் ஏங்க மாட்டா என்ன பாத்ததும் தூங்க மாட்டா மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு லெட்டர் போட்டா

ஆண்: ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு

ஆண்: தானாக தூக்கும் என் சட்ட காலர் காரணம் பையில் அமெரிக்கன் டாலர் என் பின்னால் யாரும் அடிக்காதே ஜால்ரா

ஆண்: கைய தட்டி அழைச்சா வானம் விட்டு எறங்கி ரம்பையும் தான் வருவாளே காச விட்டு எறிஞ்சா வெத்தலைய மடிச்சி ஊர்வசியும் தருவாளே

ஆண்: ஜூலி ஜூலி….ஈ… உனக்கும் எனக்கும் தினமும் ஜாலி இடையில் ஏது தடுக்கும் வேலி கால விட்டு தழுவிக்கிட்டு பாடிடலாம் கவ்வாலி

ஆண்: ரயிலு ரயிலு புல்லெட் ரயிலு புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு…

ஆண்: பம்பாயில் நேத்து கரிஷ்மா கபூரு என்னத்தான் பாத்து கண் வெச்சா பாரு என் மேலே கிரேசி வடநாட்டு ஸ்டாரு

ஆண்: என்னிடத்தில் ஏதோ கரண்ட் ஒண்ணு இருக்கு இழுக்குது பல பேர என்னுடைய நெனப்பில் சின்ன சின்ன பொண்ணுங்க மறக்குது தன் பேர

ஆண்: அம்சா அம்சா..ஆ.. நீதான் எனக்கு சிக்கன் சம்சா இனிமேல் என்ன ஜல்சா ஜல்சா பிளைட்டில் ஏறி ஹனிமூனுக்கு போயிடலாம் முன் பாசா

ஆண்: ரயிலு ரயிலு புல்லெட் ரயிலு புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு… எந்த பொண்ணுதான் ஏங்க மாட்டா என்ன பாத்ததும் தூங்க மாட்டா மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு லெட்டர் போட்டா

ஆண்: ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு