Movie: Annai Bhoomi 3D (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Added Date: Feb 11, 2022
ஆண்: ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது
பெண்: காலையில் காலையில் அது தூங்குது தூங்குது
ஆண்: வெண்ணிலாவோ. பெண்ணிலாவோ..
பெண்: ஆடை கொண்டதோ ஆசை தந்ததோ
ஆண்: ஆளை தொட்டு தோளை தொட்டு பின்னுதோ
பெண்: ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது
குழு: லாலா லாலாலோ லாலா லாலா லாலா லாலாலோ லாலா லாலா
பெண்: வானம் என்னும் ராஜ வீதியில் தேவலோக வெள்ளை யானை பவனி வந்தது
ஆண்: உன்னை என்னை தாங்கி வந்தது ஊர்வலத்தில் தேவர் கூட்டம் வானம் விட்டது
பெண்: என்ன என்னவோ வர்ண ஜாலங்கள் மெல்லிசைகளின் மேள தாளங்கள்
ஆண்: ராஜ ராஜனின் ராணியல்லவா பூஜை செய்கிற மேனியல்லவா
பெண்: ஆதி அந்தம் அற்புதம் அழகு என்னும் சித்திரம் ஆடவா கூடவா வா…
ஆண்: ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது முழிக்குது முழிக்குது
பெண்: காலையில் காலையில் அது தூங்குது தூங்குது தூங்குது தூங்குது
ஆண்: வெண்ணிலாவோ. பெண்ணிலாவோ..
பெண்: ஆடை கொண்டதோ ஆசை தந்ததோ
ஆண்: ஆளை தொட்டு தோளை தொட்டு பின்னுதோ
பெண்: ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது
ஆண்: வெள்ளி மேகம் மெத்தை போடுது வானவில்லும் வண்ண வண்ண பூவை தூவுது
பெண்: ஈர வாடை காத்து வீசுது சூடு கொஞ்சம் ஏறும்போது ஆற வைக்குது.
ஆண்: மின்னல் தேவதை ஆடி வந்தது மௌன ராகங்கள் பாடி வந்தது
பெண்: வான மீன்களும் தோழியானது விடி விளக்குகள் ஏற்றி வைக்குது
ஆண்: காம தேவன் பண்டிகை காண வேண்டும் கன்னிகை வாலிபம் ஏங்குது வா..
பெண்: ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது
ஆண்: காலையில் காலையில் அது தூங்குது தூங்குது
பெண்: வெண்ணிலாவோ. பெண்ணிலாவோ..
ஆண்: ஆடை கொண்டதோ ஆசை தந்ததோ
பெண்: ஆளை தொட்டு தோளை தொட்டு பின்னுதோ
ஆண்: ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது