Movie: Dheepam (1977)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: T. M. soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ராஜா…யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா ராஜா…யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: சரசா ரீட்டா கங்கா ரேகா சரசா ரீட்டா கங்கா ரேகா பாமா.. ராஜா..யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: நித்தம் ஒரு புத்தம் புது நெஞ்சில் உறவாடும் பழக்கம் எனதல்லவா நேரம் ஒரு ராகம் சுக பாவம் அதில் நாளும் மிதக்கும் மனதல்லவா

ஆண்: தினம் ஒரு திருமணம் நடக்கலாம் சுகம் அதில் உலகினை மறக்கலாம் என் தேவை பெண் பாவை கண்ஜாடை..

ஆண்: ராஜா…யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: தங்கம் அது தங்கம் உடல் எங்கும் அதைக் கண்டால் கடத்தும் நினைவு வரும் தஞ்சம் இளநெஞ்சம் ஒரு மஞ்சம் அது தந்தால் எதிரில் சொர்க்கம் வரும்

ஆண்: அடிக்கடி வலது கண் துடிக்குது புதுப்புது வரவுகள் இருக்குது எந்நாளும் என் மோகம் உன் யோகம்.

ஆண்: ராஜா…யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: ஒன்றா அது ரெண்டா அது சொன்னால் ஒரு கோடி ரசித்துச் சுவைப்பவன் நான்.

ஆண்: உன் போல் ஒரு பெண்பால் விழி முன்னால் வரக் கண்டால் மயக்கிப் பிடிப்பவன் நான்

ஆண்: நடிப்பிலே எவரையும் மயக்குவேன்’ அணைப்பிலே கலைகளை விளக்குவேன் என் ராசி பெண் ராசி நீ வா வா..

ஆண்: ராஜா…யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா