Movie: Asthivaram (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: T. M. Soundarajan and P. Susheela
Added Date: Feb 11, 2022
ஆண்: புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
ஆண்: இவள் போல் இந்த பெண் வாழ்க இமைத் தேன் மலர் கண்ணாக இவள் போல் இந்த பெண் வாழ்க இமைத் தேன் மலர் கண்ணாக மஞ்சளோடு மங்கல குங்குமம் பொன்மகள் கொண்டாட…
பெண்: அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம் அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
பெண்: இவர் போல் தம்பி நீ வாழ்க இணைத்தேன் இரு கண்ணாக இவர் போல் தம்பி நீ வாழ்க இணைத்தேன் இரு கண்ணாக சொந்தங்களில் பாசமும் நேசமும் காவியம் என்றாக…
ஆண்: புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
பெண்: அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
பெண்: ஏரைப் பிடித்தவன் ஏற்றம் பெறுவது பானை பிடித்தவள் பண்பாலே
ஆண்: கோடி இருந்தாலும் கொஞ்சம் இருந்தாலும் கூடி இருக்கணும் அன்பாலே
பெண்: அன்பு என்னும் பூவாலே கட்டி வைத்த பூமாலை
ஆண்: வண்ணம் கொண்டு வாடாமல் மின்னுகின்ற பொன்மாலை..
பெண்: அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
ஆண்: புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
ஆண்: மூத்த உறவுகள் கூறும் அறிவுரை ஏற்று நடப்பது பண்பாடு
பெண்: கூட்டுக் குடும்பத்தின் கூட்டிப் பிரிக்காமல் காத்துக் கிடப்பது பெண் பாடு
ஆண்: மூத்த உறவுகள் கூறும் அறிவுரை ஏற்று நடப்பது பண்பாடு
பெண்: கூட்டுக் குடும்பத்தின் கூட்டிப் பிரிக்காமல் காத்துக் கிடப்பது பெண் பாடு
ஆண்: சுற்றங்களை எப்போதும் குற்றம் சொல்லக்கூடாது
பெண்: சக்கரங்கள் இல்லாமல் வண்டி மட்டும் ஓடாது
ஆண்: புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
பெண்: அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
ஆண்: மாலை கொடுத்தவன் தாலி முடித்தவன் தேவை அறிந்தவள் பெண்டாட்டி
பெண்: காலம் முழுவதும் கூட நடக்கையில் கொண்டவனே கைக்காட்டி
ஆண்: மாலை கொடுத்தவன் தாலி முடித்தவன் தேவை அறிந்தவள் பெண்டாட்டி
பெண்: காலம் முழுவதும் கூட நடக்கையில் கொண்டவனே கைக்காட்டி
ஆண்: நல்ல மக்கள் தாயாக நாயகியே நீ வாழ்க
பெண்: நாயகியை நீங்காமல் நாயகனே நீ வாழ்க
ஆண்: புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
ஆண்: இவள் போல் இந்த பெண் வாழ்க இமைத் தேன் மலர் கண்ணாக மஞ்சளோடு மங்கல குங்குமம் பொன்மகள் கொண்டாட…
பெண்: அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
பெண்: இவர் போல் தம்பி நீ வாழ்க இணைத்தேன் இரு கண்ணாக சொந்தங்களில் பாசமும் நேசமும் காவியம் என்றாக…