Lyricist Madhan Karky

போதவில்லையே பாடல் வரிகள்

போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே

நாள் முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும்
உந்தன் சொற்கள் மீது நான் நனைந்த பின்னும்
இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்ட தட்ட
ஒட்டி கொண்டும் மூச்சில் தீயும் பற்றி கொண்டும் ம்ம்

போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே

தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே
கை கோர்த்து போகும் இந்த சாலை போதாதே
என் எண்ண விண்கலம் நான் சொல்லவே
கைபேசி மின்கலம் போதாதடி

உன் அழகை பருக என் கண்கள் போதாதடி
என் நிலையை எழுத வானங்கள் போதாதடி

நேர முள்ளை பின் இழுத்தும் வாரம் எட்டு நாள் கொடுத்தும்
சுற்றும் பூமியை தடுத்துமே ஹே

போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே

கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே
கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே
தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்
ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா

நம் கனவை செதுக்க பேரண்டம் போதாதுடா
இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதுடா

குட்டி குட்டி கோவம் கொண்டு கட்டி முட்டி மோதி கொண்டு
திட்டி திட்டி தீர்த்த பின்னும்

போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே

சுவாச பையில் உந்தன் வாசம் பூட்டி வைத்தும்
நெஞ்ச ஏட்டில் இன்னும் உன் பேரை தீட்டி வைத்தும்

பாடல் தீர்ந்து போன பின்னும் மௌனம் கூட தீர்ந்த பின்னும்
கோடி முத்தம் வைத்த பின்னும் ம்ம்

போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

Movie: Mudinja Ivana Pudi
Lyrics: Madhan Karky
Music: D. Imman