Lyricist Vairamuthu

பூ விரிஞ்சாச்சு பாடல் வரிகள்

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக அன்பே
வாழ்வால் ருசி கண்டேன்

நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே
பிரிவதேது பெண்ணே உயிரை பரிமாறு

இலையில் பசுமை போல் நீ இணைந்தாய் என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக அன்பே
வாழ்வால் ருசி கண்டேன்

பூ பூத்திருக்கும் முல்லை கொடிகாள்
பூ பூத்து வைத்து காத்து இருங்கள்

திருமண மாலைக்கு தேதி சொல்லி பறித்துக்கொள்வோம்
தேன் சுமந்திருக்கும் தென்னை மரங்காள்
தேன் சேர்த்து வைத்து காத்து இருங்கள்

திருமண இரவுக்கு தேவைப்படும் எடுத்துக்கொள்வோம்
மேகங்காள் சிந்தாமல் நின்றாடுங்கள்
நீராட பன்னீரை தான் தூவுங்கள்

முத்தம் சிந்தவா கண்ணோடு கண்ணோடு
முத்து குளித்தாய் நெஞ்சோடு நெஞ்சோடு
மொத்தத்தில் உன்னை கொடு

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக அன்பே
வாழ்வால் ருசி கண்டேன்

நான் மௌனங்களில் கவிப் படித்தேன்
நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய்

நாணத்தின் சாயத்தை முத்தமிட்டு முத்தமிட்டு நீ கரைத்தாய்
என் கனவுகளின் உருவங்களை நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்
வலைகளின் ஒலிகளில் வாலிப தூக்கத்தை கலைத்துவிட்டாய்

உன் மார்பு சுட்டாலும் குற்றாலமே
உன் பேரை சொன்னாலும் சங்கீதமே

முத்தம் கொடுப்பேன் சொல்லாதே சொல்லாதே
சொல்லி சொல்லியே கொல்லாதே கொல்லாதே
உன் கைகள் இடம் மாறுதே

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக அன்பே
வாழ்வால் ருசி கண்டேன்

நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே
பிரிவதேது பெண்ணே உயிரை பரிமாறு

இலையில் பசுமை போல் நீ இணைந்தாய் என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே…

Movie: Mugavaree
Lyrics: Vairamuthu
Music: Deva