Chidambarathil Oru Appasamy cover

Movie: Chidambarathil Oru Appasamy (2005)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Karthik and Manjari

Added Date: Feb 11, 2022

பெண்: பொண்ணா பொறந்த இந்தப் பாவம் இந்த மண்ணில் என்றைக்கு இங்கு தீரும்

பெண்: பொண்ணா பொறந்த இந்தப் பாவம் இந்த மண்ணில் என்றைக்கு இங்கு தீரும்

பெண்: கணவனைத் தேடி அலைகின்ற போதும் குடும்பத்துக்காக உழைக்கின்ற போதும் உயிரைக் கொடுத்து என்றும் ஓடாகித் தேய்வாளம்மா…

பெண்: பொண்ணா பொறந்த இந்தப் பாவம் இந்த மண்ணில் என்றைக்கு இங்கு தீரும்

பெண்: காற்றோடு வெயிலோடு மழை வந்த போதும் தாங்கும் மண் தாய் போல பெண் அவள்

பெண்: கல்லோடு புல்லோடு தனை தோண்டும் போதும் தடுக்காத மண் போல பெண் அவள்

பெண்: சுமைகளை தாங்காத சுமைதாங்கி உண்டோ சுமை கண்டு சோர்கின்ற பெண் எங்கு உண்டோ

பெண்: கண்ணுக்குள்ளே கண்ணீரின் ஆறொன்று கன்னத்திலே பாயாமல் பாப்பாளே

பெண்: பொண்ணா பொறந்த இந்தப் பாவம் இந்த மண்ணில் என்றைக்கு இங்கு தீரும்

ஆண்: உனை நம்பி உள்ளோரை நீ மறந்து வந்தால் நீ நம்பும் தெய்வங்கள் உனைக் காக்குமா

ஆண்: அவள் கண்ட துன்பத்தில் உன் பங்கு இல்லை இன்பங்கள் இங்குன்னைச் சேருமா

ஆண்: அப்போதும் உன் போதை தவறான போதை இப்போதும் உன் பாதை தவறான பாதை

ஆண்: தன் கடமை தவறிடும் பேர்க்கெல்லாம் வேண்டியதை தெய்வங்கள் காட்டாது

ஆண்: பொண்ணா பொறந்த இந்தப் பாவம் இந்த மண்ணில் என்றைக்கு இங்கு தீரும்

ஆண்: கணவனைத் தேடி அலைகின்ற போதும் குடும்பத்துக்காக உழைக்கின்ற போதும் உயிரைக் கொடுத்து என்றும் ஓடாகித் தேய்வாளம்மா…ஆ

ஆண்: பொண்ணா பொறந்த இந்தப் பாவம் இந்த மண்ணில் என்றைக்கு இங்கு தீரும்