Lyricist Yugabharathi

போன உசுரு பாடல் வரிகள்

போன உசுரு வந்துருச்சு உன்ன தேடி திருப்பி தந்துருச்சு
போன உசுரு வந்துருச்சு உன்ன தேடி திருப்பி தந்துருச்சு

இது போல ஒரு நாளே வர வேணாம் 
இனி மேலே நொடி கூட எட்டி இருக்காத
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத

போன உசுரு வந்துருச்சு உன்னவாரி அணைக்க சொல்லிருச்சு
இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிரிப்பேனே 

சோ்ந்து இருக்கும் உள்ளத்துல
துணை யாரு நமக்கு வெள்ளத்துல

உயிர் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது
நடந்தாலே அது சுகம் தானே

துணையாக நானும் வருவேனே
சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே

ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆடி அடங்கும் பூமியில நாம வாடி வதங்க தேவையில்லை
ஒருவாட்டி வரும் வாழ்க்கை துணிவோமே அதை ஏற்க

சிரிப்போமே நந்தவனம் போல
அது போதும் இந்த உயிர் வாழ

போகும் வர இந்தக் காதல் நம்ம காக்குமுன்னு 
நினைச்சா விலகும் வேதனை

போகையிலும் நாம ஒத்துமையா போகப் போறோம்
இதுதான் பெரிய சாதனை

போன உசுரு வந்துருச்சு
உன்னவாரி அணைக்க சொல்லிருச்சு

இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிரிப்பேனே… 

Movie: Thodari
Lyrics: Yuga Bharathi
Music: D. Imman

Leave a Reply