Amuthavalli cover

Movie: Amuthavalli (1959)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: T. R. Mahalingam

Added Date: Feb 11, 2022

பெண்: என்ன இது பித்துக் கொண்டவர்போல்

ஆண்: பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது பெண்ணே உன் கண்ணுக்குள்ளே பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது பெண்ணே உன் கண்ணுக்குள்ளே மற்ற மருந்துகள் ..ஆஅ..ஆஅ..ஆஅ. மற்ற மருந்துகள் தின்றாலுமே காதல் வல்லே வல்லே வல்லே கண்ணே பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது பெண்ணே உன் கண்ணுக்குள்ளே..ளே

பெண்: பச்சைக் குழந்தை மாதிரி..

ஆண்: காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே மேயாத மானும் வரக் கண்டதுண்டோடி மானே கண்டதுண்டோடி தேனே கண்டதுண்டோடி

பெண்: நன்றாக இருக்கிறது இதென்ன சங்கீதமா

ஆண்: நாத சங்கீத பொன்மணி மண்டபம் நாயகியே நமக்கு தனி மண்டபம் ஞான வேலி கண்ணே ஞான வேலி நாயகியே உனக்கு என்ன கேலி ஞான வேலி

பெண்: போதும் ஆசைக்கும் ஒரு எல்லையுண்டு

ஆண்: ஆசை வச்சேன் உன் மேலே நான் ஆடி போய் ஆவணி மாசம் ஆடி போய் ஆவணி மாசம் ஆளை மயக்குது தாவணி வேஷம் ஆசை வச்சேன் உன் மேலே

ஆண்: சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான் இந்த சின்னப் பொண்ணு காத்து மேலே குணுக்குத்தான் சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான் இந்த சின்னப் பொண்ணு காத்து மேலே குணுக்குத்தான் அடி தில்லாலங்கடி காட்டுக்குள்ளே ட்ரியோ லங்கடி மாட்டிகிட்டா சிட்டான்ஹெய் ஹெய் சிட்டான் சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான் இந்த சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு… சின்னப் பொண்ணு…