Aan Devathai cover

Movie: Aan Devathai (2018)
Music: Ghibran
Lyricists: Soundara Rajan
Singers: Chaitra Ambadipudi

Added Date: Feb 11, 2022

பெண்: பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
ஓசையெல்லாம் வேஷம் என்றே
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

பெண்: வாழ்கின்ற நேரத்தை
வாழ்கின்ற நேரத்தில்
வாழ்கின்ற நேர்மை தான்
வாழ்க்கை ஆகும்

பெண்: தூரத்தில் காண்கின்ற
மேகத்தின் பிரமாண்டம்
மழையாகி விழும் போது
துணையாய் மாறும்

பெண்: பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

பெண்: தனக்கென பிடித்த ஒன்றை
சலனத்தில் தவற விட்டு
பழங்கதை புழுதியிலே
ஏன் இந்த மோதல்

பெண்: இருப்பதை ரசித்து கொண்டு
கிடைப்பதில் உயர்வு கொண்டு
மகிழ்ச்சியில் திளைத்திருந்தால்
தீராதே காதல்

பெண்: உன்னோடு வாழ்ந்தாலும்
அலைகளின் நீர் ஆற்றும்
நான் காணும் எல்லாமே
உன்னையே சேரும்
மாட்டாத காற்றுக்கு
என் கனவுகள் தூண்டில்
எந்நாளும் ஏன் இந்த கோமாளி தேடல்

பெண்: அட முயலாமை
பகையாச்சு உலகமே
சலனமே
பதுமை கூட மரணமே

பெண்: பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
ஓசையெல்லாம் வேஷம் என்றே
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

பெண்: வாழ்கின்ற நேரத்தை
வாழ்கின்ற நேரத்தில்
வாழ்கின்ற நேர்மை தான்
வாழ்க்கை ஆகும்

பெண்: தூரத்தில் காண்கின்ற
மேகத்தின் பிரமாண்டம்
மழையாகி விழும் போது
துணையாய் மாறும்

பெண்: பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்