Movie: Aalukkoru Veedu (1960)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: A. L. Raghavan and K. Jamuna Rani
Added Date: Feb 11, 2022
ஆண்: பெண்ணில்லே நீ பெண்ணில்லே காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே
பெண்: காதல்….ஆஹாஹா காதல்
ஆண்: ஆமாம் காதல்
பெண்: காதலோ காதல் அது எங்கே கிடைக்கும் எப்படிக் கிடைக்கும் இனிப்பா புளிப்பா கசப்பா காதல் கசப்பா
ஆண்: ஆஹாஹா ஹா ஹா ஒன்பது சுவையும் ஒண்ணாக் கலந்து உண்பதுதான் மெய்க் காதல் இந்த உலகத்தைத் தூக்கி உருட்டி விளையாடும் உறவுக்குப் பேர்தான் காதல்
பெண்: புரியலையே
பெண்: கண்ணிரண்டும் மூடாமல் காத்திருந்தேன் இரவில் காத்திருந்தேன் கதவைத் திறந்து வைத்துப் பார்த்திருந்தேன் எதிர்பார்த்திருந்தேன்
ஆண்: ஆஹா ஹா ஹா காதல் வந்ததா
பெண்: இல்லை பூனை வந்தது
ஆண்: ஹே பெண்ணில்லே நீ பெண்ணில்லே காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே
பெண்: ஆணில்லே நீ ஆணில்லே அதைத் கற்றுக் கொடுக்க முடியாவிட்டால் ஆணில்லே
ஆண்: என்னைப் பார் கண்ணைப் பார் ஏக்கம் கலந்து பார் இருவர்: ஆஅ…ஆஅ..ஆ…ஆ. என்னைப் பார் கண்ணைப் பார் ஏக்கம் கலந்து பார்
ஆண்: இடுப்பை வளைத்து வெட்டிப்பார் இதயம் சுடுதா தொட்டுப்பார் பின்னே போ.. முன்னே வா.. பேசு பாடுஆடு
ஆண்: நேசம் வை நீ நேசம் வை நெஞ்சுக்குள்ளே என்னை நிறுத்தி நேசம் வை
பெண்: நேசந்தான் உன் நேசந்தான் நேசம் முத்திக் காதலானால் லாபந்தான்
ஆண்: எப்படி இருக்கு
பெண்: மயக்கமா இருக்கு
ஆண்: ஆஹா வந்துருச்சு காதல்