Lyricist Vairamuthu

பெண் கிளியே பெண் கிளியே பாடல் வரிகள்

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மைத் தோன்றாது

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண் கிளி பொய் சொன்னால் ஆண் கிளி தூங்காது

ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால் உன் பல்லவியை நீ மாற்று

பெண் கண்களே நாடகம் ஆடுமா
பெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா
யார் சொல்லியும் பெண் மனம் கேட்குமா
கைத் தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா

விடை கேட்டேன் கேள்வி தந்தாய் இது புதிரான புதிர் அல்லவா
கேள்விக்குள்ளே பதில் தேடு அது சுவையான சுவை அல்லவா

உள்ளத்தின் வண்ணம் என்னத் தெரியவில்லை
உடைத்துச் சொல்லும் வரைப் புரிவதில்லை
மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன்
ஒரு பாட்டு என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள்
உன் காதிலே கேட்கவே இல்லையா
நீ ஆழிப் போல் அலைகளை ஏவினாய்
நான் கரையைப் போல் மௌனமாய் மேவினேன்

நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம் இது பெண் பூசும் அறிதாரமா
உண்மைக் காண வன்மை இல்லை
உங்கள் விழி என்மேல் பழி போடுமா

நிலவைப் பிரிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சைப் புரிவதற்கு வலிமை இல்லை

கானல் நீர் தேடாதே அங்கே நீர் இல்லை
ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால் உன் பல்லவியை நீ மாற்று

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு…

Movie: Sandhitha Velai
Lyrics: Vairamuthu
Music: Deva