Lyricist Palani Bharathi

பஞ்சாங்கம் பார்க்காதே பாடல் வரிகள்

பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா
பால் காச்சும் நாள் சொல்லு மாமா மாமா

பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா
வந்து பால் காச்சும் நாள் சொல்லு மாமா மாமா

என் நெஞ்சுக்குள்ள வீடு ஒன்னு கட்டி வெக்கிறேன்
கழுத்து சங்கிலியில் ஊஞ்சல் ஒன்னு போட்டு வெக்கிறேன்

வந்து விடு உன்னை அதில் பூட்டி வெக்கிறேன்
அந்த சாவி கொத்த இடுப்புல மாட்டி வெக்கிறேன்

பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா
வந்து பால் காச்சும் நாள் சொல்லு மாமா ஆ

வெக்கங்கள பூட்டி விட்டு ஆசைகள கூட்டி கிட்டு
ராத்திரி திருவிழா போலாமா

பஞ்சு மிட்டாய் இடுப்பென பிச்சு பிச்சு தின்னு கிட்டு
சேலை ராட்டினம் சுத்தலாமா ஓ

ஆ ரெண்டு பேரும் சேர்ந்திகிட்டு
வட்டம் புடிச்சு கட்டில் தேர் இழுப்போமா

ஓ தேரு போகும் வீதியெல்லாம் உபசரிச்சு
முத்தம் தண்ணி தெளிப்போமா

என் குங்குமத்த உன் சந்தனத்த தொட்டு கலந்திட சொல்லலாமா
என் சந்தனத்த உன் குங்குமத்த கலந்திட சொல்லலாமா

பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா
வந்து பால் காச்சும் நாள் சொல்லு மாமா

ஜன்னல்கள மூடி வச்சு கட்டில் மட்டும்
ஆடுகின்ற காதல் பூகம்பம் பார்க்கலாமா ஓ

ஆ ரெக்கையோட மத்தியில ரேகை மழை
சிந்தி விழ குங்கும வானவில் பார்க்கலாமா ஹா

ஓ ஹோ ஹோ சூரியன மறந்து புட்டு
உன் கூந்தல் இருட்டில வாழலாமா

ஓ வழியில வெளிச்சத்துக்கு மூக்குத்தி விளக்கினை ஏத்தலாமா
என் சந்தனத்த உன் குங்குமத்த தொட்டு கலந்திட சொல்லலாமா

என் குங்குமத்த உன் சந்தனத்த கலந்திட சொல்லலாமா
பஞ்சாங்கம் பாப்பேனா வா மா வா மா
இது பால் காச்சும் நேரம் தான் வா மா வா மா

நீ கட்டி வச்ச வீட்ட கண்டு சொக்கி நிக்கிறேன்
சொல்லு வீட்ட சுற்றி முத்த செடி நட்டு வெக்கிறேன்

வந்துவிடு உன்னை அதில் பூட்டி வெக்கிறேன்
அந்த சாவி கொத்த இடுப்புல மாட்டி வெக்கிறேன்…

Movie: Thavasi
Lyrics: Pazhani Bharathi
Music: Vidyasagar