Lyricist Vaali

பாம்பு என வேம்பு என மாறி வரும் தாயே பாடல் வரிகள்

அந்தமுள்ள சந்தமுள்ள செந்தமிழில்
அடியவர் தொழும் அந்தரியே..
ஆதியென ஜோதியென நீதியென

சுடர்விட எழும் சுந்தரியே
அம்மா அழுதோம் தொழுதோம்
அருள்வாய் துணை நீயே…

பாம்பு என வேம்பு என மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு பாதி உடல் நீயே

பாம்பு என வேம்பு என மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு பாதி உடல் நீயே

மஞ்சளோடு குங்குமத்துச் சாந்தணிந்த மாயே
மன்னன் எனும் தட்சன் மடி வந்துதித்த சேயே

மஞ்சளோடு குங்குமத்துச் சாந்தணிந்த மாயே
மன்னன் எனும் தட்சன் மடி வந்துதித்த சேயே

பாம்பு என வேம்பு என மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு பாதி உடல் நீயே

நீ இறங்கி வா கருணைக் கடலே
நெஞ்சிறங்கி வா அமுத சுடரே
நீ இறங்கி வா நெஞ்சிறங்கி வா வா….

பாம்பு என வேம்பு என மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு பாதி உடல் நீயே

நெஞ்சறிந்து செய்த பிழை ஏதும் இல்லை அம்மா
நெஞ்சுருகப் பாடுகையில் நிற்பதென்ன சும்மா

உன்னை அன்றி கை கொடுக்க
உற்ற துணை ஏது திக்கு திசை அற்று
மனம் தத்தளிக்கும் போது நன்மை தரும் காளி

ஆ…ஆஆ…ஆஅ….நன்மை தரும் காளி
அவள் என நம்பினவர் ஏற்கும்
உன் இரண்டு சேவடியை உச்சிதனில் ஏந்தும்

மங்கலங்கள் தந்து உதவும் எங்கள் இறையே
இக்கணத்தில் தீர்த்து விடு எங்கள் குறையே…

பாம்பு என வேம்பு என மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு பாதி உடல் நீயே

மஞ்சளோடு குங்குமத்துச் சாந்தணிந்த மாயே
மன்னன் எனும் தட்சன் மடி வந்துதித்த சேயே

நீ இறங்கி வா கருணைக் கடலே
நெஞ்சிறங்கி வா அமுத சுடரே
நீ இறங்கி வா நெஞ்சிறங்கி வா வா….

ஆஅ…..ஆஅ…..ஆஆஆ…..
ஆஅ…..ஆஅ…..ஆஆஆ…..

மஞ்சக் குளியலும் முத்துக் குவியலும்
அங்கம் முழுவதும் பொங்கிப் பரவிடும்
சுந்தரியே ஓ….. சுந்தரியே படபட படவென
அருள் மழை பொழியட்டும்
சுடர் விழி திறந்திடு அம்பிகையே

வட்டக்கதிரென வண்ணச் சுடரென
நீலக்கருவிழி நித்தம் ஒளி விடும்

சுந்தரியே ஓ…….சுந்தரியே சடசட சடவென
துயரங்கள் சரியட்டும் அடைக்கலம் கொடுத்திடு சுந்தரியே

தர்மம் வெற்றி பெற கர்மம் வீழ்ச்சியுற
சிம்மம் ஏறி வரும் சூலினியே
எண் வகை சிறப்புடன் ஏழ் வகை சாகரம்
தன்வசம் கொண்டிடும் உத்தமியே

வையம் யாவும் ஒரு கையில் ஏந்தி
அருள் தெய்வமாகி வரும் மாலினியே

சரணம் உன் திருவடி சங்கரியே
சகலமும் அறிந்திடும் சாமுண்டியே
இஷ்ட தெய்வம் என எங்கள் முன்பு வரும்
நாயகியே நாயகியே…

திருவடி தினம் தினம் வலம்வர பலம் தர
இருளிளை கழித்திங்கு நலம் பெற நலம் பெற
அருள் மழை நீ பொழிவாய்

தலை முதல் கால் வரை சரம் என முத்துக்கள்
கிடுகிடு கிடுவென இறங்கிடவே
சந்தனம் வேப்பிலை படபட படபட
பரிசுத்தம் கிடைத்துடன் சுகம் பெறவே

அம்மா அழுதோம் தொழுதோம் அருள்வாய் துணை நீயே
அம்மா அழுதோம் தொழுதோம் அருள்வாய் துணை நீயே…

Movie: Sakthivel
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja