Aanandham cover

Movie: Aanandham (2001)
Music: S.A. Rajkumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: P. Unnikrishnan and Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எஸ்.எ. ராஜ்குமார்

விஷ்லிங்: ……………

பெண்: பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம் துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன் கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்

பெண்: செவ்வந்தி பூவில் நடுவில் பார்த்தேன் தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன் இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம்

குழு: ச ரி / ச ம / க ரி க ச ரி / ச ம / க ரி க ச ரி ச ம / க ரி / க ம ப / ப ச ச நீ த நீ / ப த ப ம / க ம க க ம நீ / ப க ரி / க ச

பெண்: பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

விஷ்லிங்: ……………

ஆண்: அடி காலம் முழுவதும் காத்திருப்பேன் நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன் அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும் எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு

பெண்: தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை இந்த நாணயம் போதாதா தழுவும் மனதை குங்கும சிமிழில் தடுக்க முடியாதா

ஆண்: செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லரை சிதறிவிடும் செலவு செய்ய நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்

பெண்: பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்

ஆண்: புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

பெண்
குழு: ………..

பெண்: அட நேற்று நடந்தது நாடகமா நீ காசு கொடுத்தது சூசகமா அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்க்கிறேன்

ஆண்: அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே இந்த நாணயம் ஓர் சாட்சி இருக்கும் உயிரும் உனக்கே உபயம் எதற்கு ஆராய்ச்சி

பெண்: இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன் பிறர் பார்க்கவும் விட மாட்டேன் கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்

ஆண்: பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

பெண்: துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்

ஆண்: கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்

பெண்: செவ்வந்தி பூவில் நடுவில் பார்த்தேன் தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்

ஆண்: இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்

பெண்: ஒற்றை நாணயம்

குழு: ச ரி ச ம க ரி க ச ரி ச ம க ரி க ச ரி ச ம க ரி க ம ப ப ச ச நீ த நீ ப த ப ம க ம க க ம நீ ப க ரி க ச ச ரி ச ம க ரி க ச ரி ச ம க ரி க ச ரி ச ம க ரி க ம ப ப ச ச நீ த நீ ப த ப ம க ம க க ம நீ ப க ரி க ச